- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட இப்படியும் செய்யலாமா? இதுவரை தெரியாமல் போயிற்றே. வாழைக்காய் வைத்து சுவையான கோலா உருண்டை எப்படி...

அட இப்படியும் செய்யலாமா? இதுவரை தெரியாமல் போயிற்றே. வாழைக்காய் வைத்து சுவையான கோலா உருண்டை எப்படி செய்வது?

- Advertisement -

வாழைக்காய் வைத்து இதுவரை வாழைக்காய் கூட்டு, வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் போன்றவற்றை மட்டுமே சமைத்து இருப்போம். ஆனால் இவ்வாறு சமைக்கும் உணவுகளை பெரும்பாலும் பலரும் விரும்பி உண்பதில்லை. முடிந்தவரை உணவில் வாழைக்காயை தவிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆனால் வாழைக்காயை பயன்படுத்தி ஒரு சுவையான சைடிஷ் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். இதனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

pottu-kadalai

தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் – ஒன்று, பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – ஒரு ஸ்பூன், கசகசா – அரை ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய் – ஒன்று, கிராம்பு – ஒன்று, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வாழைக்காயை நன்றாக சுத்தம் செய்து, தோல் நீக்கிவிட்டு, அதனை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

kola

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், தேங்காய்த்துருவல், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் துருவி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பு: இவற்றை அறைக்கும் பொழுது சிறிதளவு தண்ணீர் கூட சேர்ந்து விடக்கூடாது.

- Advertisement -

பின்னர் அரைத்த விழுதினை ஒரு கின்னத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொண்டு அரைத்த விழுதினை சிறிய உருண்டைகளாகவோ அல்லது வடை தட்டுவது போன்ற பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

urundai

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடானதும் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை திருப்பிவிட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மீதமுள்ள உருண்டைகள் அனைத்தையும் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயாராகிவிட்டது.

kola

இதனை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் போதும். வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை குழந்தைகள் மிகவும் விருப்பமாக ரசித்து சாப்பிடுவார்கள். இல்லை எனில் சாதத்துடன் சைடிஷ்ஷாக சேர்த்துக் கொடுக்கலாம். வீட்டிலுள்ள எவருக்குமே தெரியாது இதில் வாழைக்காய் சேர்த்திருப்பது. வாழைக்காய் தவிப்பவர்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து கொடுத்து பாருங்கள். அவர்கள் இதன் சுவையில் மீண்டும் வேண்டும் என்று கேட்பார்களே தவிர, ஒரு போதும் இதனை தவிர்க்க மாட்டார்கள்.

சற்று முன்