- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோரிக்கைகளை நிறைவேற்றும் பைரவர் வழிபாடு

கோரிக்கைகளை நிறைவேற்றும் பைரவர் வழிபாடு

- Advertisement -

உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடிய ஒரு முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் கால பைரவர். இவர் சனி பகவானுக்கு குருவாக திகழக் கூடியவர். காலங்களை தன்னகத்தே வைத்து வைத்திருக்கும் காவல் தெய்வமாக திகழக்கூடியவர். அப்படிப்பட்ட கால பைரவரை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அஷ்டமி திதியில் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அதிலும் நாம் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் பைரவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றும் வழிபாடு

நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் நமக்கு பலன்களை தரக்கூடிய ஈஸ்வர பட்டத்தை பெற்ற சனீஸ்வரனுக்கே குருவாக திகழக்கூடிய கால பைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதோடு, மன பயமும் நீங்கும், தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், எதிரிகளால் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். இப்படி பல பலன்களை நாம் கூறிக் கொண்டே செல்லலாம்.

- Advertisement -

நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தார்கள் என்றால் கண்டிப்பான முறையில் அவர்களுடைய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்ப்பதற்கு கால பைரவர் அருள் புரிவார் என்று கூறப்படுகிறது.

இந்த தேய்பிறை அஷ்டமி என்பது அக்டோபர் மாதம் 24ஆம் தேதி வருகிறது. அதுவும் வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது நம் அனைவருக்கும் தெரியும். வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அஷ்டமி திதியில் கால பைரவரை நாம் மனதார வழிபாடு செய்யும் பொழுது நாம் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் காலபைரவர் நிறைவேற்றுவார் அதற்குரிய ஒரு சூட்சுமமான வழியை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு உடையாத முழு முந்திரி வேண்டும். நமக்கு எத்தனை கோரிக்கைகள் இருக்கிறதோ அத்தனை எண்ணிக்கையில் முந்திரியை வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை நாம் ஆலயத்திலும் செய்யலாம் வீட்டிலும் செய்யலாம். நம்முடைய ஒவ்வொரு கோரிக்கையையும் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு முந்திரியை மாலையாக கட்ட வேண்டும்.

ஆலயத்திற்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் செவ்வரளி மலர்களையும் இந்த முந்திரி மாலையையும் எடுத்துக்கொண்டு காலபைரவர் சன்னதிக்கு சென்று அவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து இந்த மாலைகளை அவருக்கு சாற்று சொல்லி வழங்க வேண்டும். பிறகு நம்முடைய கோரிக்கைகள் என்னென்ன நினைத்தோமோ அவை அனைத்தையும் கால பைரவரிடம் கூறி அவரை வழிபாடு செய்து விட்டு அந்த முந்திரி மாலையை மட்டும் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதில் இருந்து இரண்டு முந்திரி பருப்புகளை மட்டும் கோவிலுக்கு வரும் யாராவது இருவருக்கு கொடுத்து விட வேண்டும். மீதம் இருக்கும் முந்திரி பருப்புகளை வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும். ஆலயத்திற்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து நாம் கட்டிய முந்திரி மாலையை ஒரு தாம்பாள தட்டில் வைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு நிறைவு செய்த பிறகு இந்த முந்திரி மாலை எடுத்து வீட்டில் இருப்பவர்களுக்கு போக மீதம் இருப்பதை அருகில் இருப்பவர்களுக்கும் பிரசாதமாக தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பண வரவு அதிகரிக்க புதன்கிழமை பரிகாரம்

இந்த முறையில் காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது என்னென்ன கோரிக்கைகளை நினைத்து முந்திரி மாலையை கட்டினோமோ அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் கால பைரவர் நிறைவேற்றுவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்