- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு

கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

முழு முதல் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நாம் திரும்பும் இடமெல்லாம் வீற்றிருக்கக் கூடியவராக மிகவும் எளிமையான கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்கு முன்பாக முழுமனதோடு விநாயகரை வழிபாடு செய்து விட்டு தொடங்கினோம் என்றால் அந்த செயல் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் கேது பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய கடவுளாகவும், சனீஸ்வர பகவானின் தோஷத்தில் இருந்து நம்மை காக்கக்கூடிய கடவுளாகவும் விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானிடம் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கக்கூடிய கோரிக்கையை அதுவும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

விநாயகப் பெருமானிடம் பல விதங்களில் நாம் வழிபாடு செய்வதுண்டு. அதிலும் குறிப்பாக ஒரு சில பொருட்களை வைத்து வழிபாடு செய்யும்பொழுது அந்த வழிபாட்டின் பலன் விரிவிலேயே நமக்கு கிடைக்கும். அந்த வகையில் திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய அரச இலை, சிறிது அருகம்புல், மஞ்சள், குங்குமம், சில்லறை நாணயம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

விநாயகர் ஆலயத்திற்கு சென்ற பிறகு விநாயகருக்கு முன்பாக அமர்ந்து அந்த அரச இலைக்கு மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு அந்த அரச இலையின் மேல் அருகம்புல்லை வைத்து அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தையோ எவ்வளவு உங்களால் விநாயகருக்கு காணிக்கையாக வைக்க முடியுமோ அதை வைக்க வேண்டும். பிறகு இந்த அரச இலையை அப்படியே உங்களுடைய இரண்டு கைகள் எடுத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை வலம் வந்து உங்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை முன்வைத்து விநாயகரின் பாதத்தில் இந்த அரச இலை வைத்து விட வேண்டும். இப்படி வைத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வைத்த நியாயமான கோரிக்கை விரைவில் நிறைவேறும். இத்தனை வாரங்கள் என்று சங்கல்பம் வைத்துக் கொண்டு, இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்ய நல்ல பலன் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சொந்தமாக நிலம் வீடு வாங்க வழிபாடு

எந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தாலும் வேண்டிய வேண்டுதலை விநாயகர் பெருமான் நிறைவேற்றுவார் என்றாலும் இந்த வழிமுறையை பின்பற்றி வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்