மந்திரம், தியானத்தின் போது கொட்டாவி வருவது சரியா? தவறா? ஏன் கொட்டாவி வருகிறது?

kottavi

பொதுவாகவே தியானம் அல்லது யோகா செய்யும் போதோ? மந்திரம் உச்சரிக்கும் போதோ? கொட்டாவி வருவது நல்லதா? கெட்டதா? என்று பலரின் கேள்வியாக இருக்கும். இதற்கு காரணம் என்ன என்று சிந்தனையில் தோன்றியிருக்கும். கொட்டாவியை பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும் இன்று வரை சரியான காரணம் கூற முடியவில்லை. கொட்டாவி என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு கொட்டாவி வந்து விடும். அருகில் இருக்கும் நபர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் வந்துவிடும். சாதாரணமாக கொட்டாவி வருவது மற்றும் மந்திரம் சொல்லும் போது கொட்டாவி வருவதும் ஒரே காரணம் தான். சிலர் இறைவன் ஆட்கொள்கிறார் அதனால் மந்திரம் உச்சரிக்கும் போது கொட்டாவி வருகிறது என்றும், தீய சக்திகள் வெளியேறுகிறது அதனால் கொட்டாவி வருகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மை அது அல்ல. அதை பற்றிய அலசல் இதோ!!

oom

மனித உடலுக்கு தேவையான முக்கிய வாயு பிராண வாயு. நாம் சுவாசிக்கும் காற்று பிரணவாயுவாக இதயத்திற்கு செல்கிறது. இதயம் அந்த காற்றை மற்ற உறுப்புகளுக்கு பகிர்ந்தளிக்கிறது. இவ்வாறு பகிர்ந்து கொடுக்கப்படும் பிராண வாயு மூளைக்கும் செல்கிறது. ஆனால் மூளைக்கு அது போதவில்லை என்றால் என்ன செய்யும்? மூளையானது தனக்கு தேவையான பிராண வாயுவை எடுத்து கொள்ள உடலுக்கு கொட்டாவி விடுமாறு கட்டளையிடும். வாயை திறந்து கொட்டாவி விடும் போது மூளை தனக்கு தேவையான காற்றை உள் இழுத்து கொள்ளும். பின்னர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்யும். இதுவே கொட்டாவி வருவதற்கு முதல் காரணம்.

அடுத்து உடல் சோர்வு காரணமாக கொட்டாவி வரும். உடலுக்கு கட்டாயம் ஓரளவு பகலிலும் ஓய்வு தேவை. இரவில் தான் நன்றாக தூங்குகிறோமே? பிறகு எதற்கு ஓய்வு என்று கேள்வி கேட்க கூடாது. இரவில் தூங்குகிறோம் சரிதான். ஆனால் அதற்காக பகல் முழுவதும் இயந்திரம் போல் கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் உடலை கட்டாயப்படுத்தி இயக்கி கொண்டே இருந்தால் அதனால் முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் தனக்கு ஓய்வு தேவை என்பதை உடலானது கொட்டாவி விட்டு தெரியப்படுத்தும். அதையும் பொருட்படுத்தாமல் சிலர் இயங்கி கொண்டிருப்பார்கள். இதனால் உடலானது சோர்வுறும். பலவீனமடையும். கை, கால், உடல் வலி எடுக்க துவங்கும். உடல் சுறுசுறுப்புடன் செயல்பட கொட்டாவி வரும்போதே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேலையை சிறப்பாக செய்யலாம்.

kottavi

மந்திரம், தியானம் போது ஏன் கொட்டாவி வருகிறது? யாரோ ஒருவர் சொன்னார்கள், இந்த மந்திரம் சொன்னால் நல்லது நடக்கும், இந்த தியானம் செய்தால் மன அமைதி கிட்டும் என்று, அதனால் செய்கிறேன்!! என்று முழு ஈடுபாடு இல்லாமல், அவ நம்பிக்கையுடன் செய்தால் அதாவது பிடிக்காத ஒரு விஷயத்தை ஏதோ பிரதிபலன் கருதி செய்தால் கொட்டாவி கட்டாயம் வரும். இவ்வாறு இல்லாமல் ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் செய்தும் கொட்டாவி வந்தால் உங்கள் மனம் ஒருநிலையில் இருக்கிறது ஆனால் உடல் தன்னை தயார் செய்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

இதற்கு காரணம் அதிக நேரம் கண் விழிப்பது, ஓய்வில்லாமல் உழைப்பது, செல்போன், கணினி, போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி கண்களை அயர்வுற செய்வது, மன அழுத்தம், தேவையற்ற சிந்தனைகள் தொடர்ந்து செய்வது போன்ற காரணங்களால் மூளையின் வெப்ப நிலை உயர்கிறது. அதனை சமன் செய்ய மூளை கொட்டாவி மூலம் பிரணவாயுவை பெறுகிறது.

kottavi

சிலருக்கு புத்தகம் படித்தாலே கொட்டாவியுடன், தூக்கமும் வந்து விடும். இதற்கு காரணம் புத்தகத்தில் இருக்கும் கருத்துகளில் உங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆர்வமுடன், மிகவும் பிடித்து ஒரு செயலை செய்யும் போது கொட்டாவி வராது. உதாரணத்திற்கு இரவில் உங்கள் உடல் சோர்வுற்றிருக்கும் போதும் உங்களுக்கு பிடித்த வீடியோ காட்சிகள் அல்லது திரைபடங்கள் பார்த்து கொண்டிருந்தால் உங்களுக்கு கொட்டாவியும் வராது, தூக்கமும் வராது. வந்த தூக்கமும் காணாமல் போய்விடும். ஏன்? உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்கிறீர்கள். அதுவே பிடிக்காத விஷயத்தை செய்யும் போது அலுப்பு ஏற்படும். இதனால் உங்களை அறியாமல் கொட்டாவி வருகிறது. மந்திரம் உச்சரிக்கும் போது கொட்டாவி வந்தால் ஒன்றும் தவறில்லை. இன்னும் ஈடுபாடு கொண்டு, முழு நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் அவ்வளவு தான். மந்திரம் கூறினால் உடனே இறைவன் நேரடியாக எல்லாம் கொட்டாவி மூலம் அருள் புரிந்து விடமாட்டார். இறையருள் உங்கள் வாழ்வில் கிட்டும் என்பதே உண்மை.