5 நாட்களில் கொத்தமல்லி தழைகளை வீட்டிலேயே வளர்க்க முடியுமா என்ன? கொத்தமல்லி விதைகளை இப்படி மட்டும் விதைத்து பாருங்கள். நீங்களே நம்ப மாட்டீங்க!

coriander3
- Advertisement -

சமையலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் கொத்தமல்லி தழைகளை நம் வீட்டிலேயே எப்படி வளர்ப்பது என்பதை பற்றிய ஒரு சுலபமான முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் குப்பையில் தூக்கி போடும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பேரிச்சம்பழம் வரக்கூடிய டப்பாக்கள் இப்படி சின்ன சின்ன அகலமான டப்பாவில் கூட, இந்த டிப்ஸை ட்ரை பண்ணி, உங்களுடைய வீட்டிலேயே கொத்தமல்லி தழைகளை வளர்த்து பார்க்கலாம். ஐந்தே நாட்களில், நிச்சயமாக நீங்கள் விதைத்த விதை முளைத்து வரும் போது மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

coriander

முதலில் ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் காய்ந்த, ஈரப்பதமுள்ள செம்மண் அல்லது கரிசல் மண், தோட்ட மண் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதை அகலமான அந்த பிளாஸ்டிக் டப்பில் தேவையான அளவு கொட்டி கொண்டால் போதும். தண்ணீர் ஊற்றி இருக்கிய மண்ணில் விதைகளை தூவினால் அவ்வளவு சீக்கிரத்தில் முளைத்து வராது. காய்ந்த மணலில், ஈரப்பதம் இருக்க வேண்டும். எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி விதைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிய உரலில் போட்டு, அந்த கொத்தமல்லி விதைகள் இரண்டாக உடையும் வரை இடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் தரையில் கொத்தமல்லி விதைகளை கொட்டி அதன் மேல் ஒரு கல்லை கொண்டு நுனுக்கினால், கொத்தமல்லி விதைகள் இரண்டாக உடைந்துவிடும். உடைந்த இந்த கொத்தமல்லி விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 லிருந்து 10 மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்து விடுங்கள். கொத்தமல்லி விதைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும்.

coriander2

இப்போது தயாராக இருக்கும் மண்ணில் ஊறவைத்த கொத்தமல்லி விதைகளை, உங்களுடைய கையாலேயே எடுத்து தூவி விடுங்கள். ஊறவைத்த தண்ணீரையும் சேர்த்து அந்த தொட்டியில் பரவலாக ஊற்றி விட வேண்டும். இப்போது விதைகளின் மேலே இரண்டு கைப்பிடி அளவு மண்ணை மட்டும் எடுத்து தூவி விட வேண்டும்.

- Advertisement -

மேலே தண்ணீரை ஸ்பிரே செய்து விட வேண்டும். ஸ்ப்ரே பாட்டில்  இல்லை என்றால் உங்கள் கைகளாலேயே பரவலாக தண்ணீரை தெளித்து விடுங்கள். அவ்வளவு தான். மண்ணில் தண்ணீர் நிற்கும் அளவிற்கு அப்படியே ஊற்றி விடக்கூடாது. தினமும் லேசாக தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

coriander1

அளவோடு தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் நிறைய ஊற்றி விட்டால் விதைகள் முளைக்காது. செடி அழுகிவிடும். ஐந்தாவது நாள் உங்களுடைய கொத்தமல்லித்தழை விதை முளைக்க ஆரம்பித்திருக்கும்.

இனி 20 நாட்களில் கொத்தமல்லித்தழை பச்சை பசேலென வளர தொடங்கி இருக்கும். உங்களுடைய வீட்டில் கொத்தமல்லித்தழை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. இந்தப் கொத்தமல்லி தழைகளை சமையலுக்குப் பயன்படுத்தும் போது வாசத்தோடு சேர்ந்த மனநிறைவும் இருக்கும்.

- Advertisement -