கோவிலில் அறியாமல் கூட, யாரும் இனி இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதிங்க! இது நமக்கு பெரிய பாவத்தை சேர்த்துவிடும்.

temple

யாரும் தவறுகளை, தவறு என்று நினைத்து செய்வது கிடையாது. மனிதர்களாகப் பிறந்தவர்கள் தெரிந்து செய்யக்கூடிய தவறுகளை விட, அறியாமல் தெரியாமல் செய்யக்கூடிய தவறுகள் ஏராளம். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறியாமல் கூட நாம் சில தவறுகளை செய்து விடக்கூடாது, என்பதற்காகத் தான் இந்த பதிவின் மூலம் நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது தவறு என்று சாஸ்திரம் சொல்கின்றது. அதை ஏற்றுப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக பின்பற்றிக் கொள்ளலாம். இல்லை சாஸ்திரம் சொல்வதே தவறு என்று நினைப்பவர்களுக்கு கருத்து சொல்ல எதுவுமே கிடையாது.

virudhalacham-temple

கோவிலுக்கு செல்லும் பொழுது நம்மில் சில பேர் அறியாமல் செய்யக்கூடிய தவறு என்ன? தெரிந்து கொள்வோமா? நம்முடைய வீட்டில் பூஜை செய்வதற்காக பிரசாதத்தை நம் கையாலேயே தயார் செய்கின்றோம். அந்தப் பிரசாதத்தை நம் வீட்டில் இருக்கும் இறைவனுக்கு வைத்து படைத்து நிவேதனமும் செய்து விட்டோம்.

வீட்டில் இறைவனுக்காக நிவேதனம் செய்யப்பட்ட அந்த பிரசாதத்தை நாம் சாப்பிடலாம். நம் வீட்டில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம். சில சமயம் இப்படியாக வீட்டில் பூஜைக்காக செய்யப்பட்ட பிரசாதங்கள் நிறைய இருக்கும். அதாவது அளவுக்கு மீறி, அதிகமாக செய்து இருப்போம். சில பேர் இந்த பிரசாதத்தை கொண்டுபோய் பக்கத்தில் இருக்கும் கோவிலில் வைத்து அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள். இதை தவறு என்று சொல்கிறது சாஸ்திரம்.

prasadam

நாலு பேருக்கு அன்னதானம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் பதிவல்ல இது. இருப்பினும் நம் வீட்டில் இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை கோவிலுக்குள் கொண்டுபோய், கோவில் பிரகாரத்தில் கொண்டுபோய் நிச்சயம் அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க கூடாது.

கோவிலுக்குள் நாம் கொண்டு செல்லும் பிரசாதத்தை அங்கு இருக்கும் இறைவனுக்கு நிவேதனமாக படைத்து விட்டு அதன் பின்பு பக்தர்களுக்கு வினியோகம் செய்வது தான் சரியான முறையே தவிர, கோவிலில் இருக்கும் இறைவனுக்கு நாம் கொண்டு சென்ற பிரசாதத்தை நிவேதனமாகப் படைக்காமல் அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது தவறு என்று சொல்லப்பட்டுள்ளது.

night-sleep-temple

வீட்டில் நிவேதனம் செய்த பிரசாதத்தை மீண்டும் கோவிலில் கொண்டு போய் அங்கு உள்ள இறைவனுக்கு நிவேதனம் செய்ததும் தவறான ஒரு விஷயம்தான். வீட்டில் நிவேதனம் செய்த பிரசாதத்தை நீங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். ஆனால், கோவிலுக்குள் சென்று அந்த பிரசாதத்தை வினியோகம் செய்ய கூடாது. கோவில் வாசல் படிக்கு வெளிப்பக்கம் கொஞ்சம் தூரமாக தள்ளி நின்றுதான் அங்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.