கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு முறை

Lord krishnar

“தர்மத்திற்கு சோதனை காலகட்டங்களில் எல்லாம் தான் அவதரிப்பதாக கூறியவர் அந்த பரந்தாமன். மனிதர்களுக்கு சிறந்தவற்றை போதிக்கும் “பகவத் கீதையை” உலகிற்கு அளித்த மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” ஆவார். அவர் பிறந்த “ஆவணி” மாதம் “ரோகிணி” நட்சத்திர தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

krishna

திருமாலின் தசாவதாரங்களில் மக்கள் பெரும்பாலானவர்களால் விரும்பி வழிபடக்கூடிய அவதாரமாக கிருஷ்ணாவதாரம் இருக்கிறது. குழந்தையாகவும், இளைஞனாகவும் கண்ணன் செய்த அற்புதங்கள் “ராஸலீலாவாகவும்”, “கிருஷ்ணலீலாவாகவும்” பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. கண்ணனின் பக்தி கொண்ட பல ஆன்மீக அருளாளர்கள், அவனில் கலந்த புனித வரலாறு பாரத நாடு முழுதும் பரவலாக இருக்கிறது. தன்னிடம் உண்மையான அன்பு கொண்ட பக்தர்களுக்கு அதி விரைவாக வந்து உதவுபவர் கிருஷ்ண பரமாத்மா. அவர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாம் நாம் என்ன செய்து கிரிஷ்னரின் அருளை பெறலாம் என்று பார்ப்போம்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வீட்டின் பூஜையை நன்கு சுத்தம் செய்து, அங்கிருக்கும் கடவுள் படங்களுக்கு பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பின்பு அன்று மாலை நேரத்தில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் சிலையை வைத்து மலர்களை கொண்டு அலங்கரித்து அரிசி கோலமாவில் கண்ணனின் பாதங்களை வீட்டு வாயில் படியிலிருந்து, வீட்டிற்குள் வரும் வகையில் வரைய வேண்டும். இரு குத்துவிளக்குகளில் தீபமேற்றி, சாம்பிராணி தூபங்கள் கொளுத்தி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இனிப்பு கார பலகாரங்களான “ரவை லட்டு, சோமாஸ், முறுக்கு, சீடை, பாயசம்” மற்றும் பழங்களை படையல் வைத்து, கிருஷ்ண பகவானுக்குரிய மந்திரங்கள், பாடல்கள் அல்லது பகவத் கீதையின் சில அத்தியாயங்களை படித்து, சிறிது நேரம் கண்ணனின் தோற்றத்தை தியானிக்க வேண்டும்.

Krishna feet

தியானத்தை முடித்த பின்பு அவருக்கு செய்த படையல்களை, கிருஷ்ணனின் அருட்பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உண்ண கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் உண்ண கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை அனைவரும் செய்வது சிறந்தது. அதிலும் குழந்தை பேறில்லாமல் வருத்தமுறும் பெண்கள், கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை மேற்கொண்டு, படையல் பிரசாதங்களை உங்கள் அக்கம் பக்கத்தில் ஐந்து வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக உண்ண கொடுத்து, அவர்களை மகிழ்விக்க செய்தால் கூடிய விரைவில் அந்த “ஆலிலை கண்ணன்” போன்ற ஒரு குழந்தைப்பேறு கிட்டும்.

- Advertisement -

Krishnar

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று எவர் ஒருவர் விரதம் இருந்து பகவான் கிருஷ்ணரை மனமுருகி பிரதிக்கிறாரோ அவருக்கு எத்தைகைய குறைபாடு இருந்தாலும் நீங்கும். கல்வியில் சிறக்க, திருமணம் கைகூடி வர, விவசாயம் செழிப்பாக இருக்க, அனைத்து வளங்களையும் பெற அன்றை தினத்தில் கிருஷ்ணரை வணங்கலாம்.

இதையும் படிக்கலாமே:
தலை எழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Krishna jayanthi vazhipadu and Krishna jayanthi vratham benefits in Tamil.