லட்சுமி தேவி மற்றும் குபேர பகவானின் சாபத்தை பெற்றுத் தரக்கூடிய மிகப்பெரிய தவறு. இந்த தவறுகளை நீங்கள் செய்தால், வறுமையிலிருந்து உங்களை காப்பாற்ற யாராலும் முடியாது.

Kuberan valipadu

ஒரு மனிதன் மிகப்பெரும் அளவிலான செல்வங்களை பெற்று வாழ்ந்தால் அவருக்கு குபேர சம்பத்து இருக்கிறது என சொல்வார்கள். இந்து மற்றும் பௌத்த மதங்களில் மனிதர்கள் மனநிறைவுடன் வாழ்வதற்கு உதவும் உலகின் செல்வங்கள் அனைத்திற்கும் அதிபதி குபேர பகவான் என கருதுப்படுகிறார்.  இந்திய கட்டிடக்கலை சாஸ்திரமான வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படும் “அஷ்டதிக் பாலகர்கள்” எனப்படும் எட்டு திசைகளுக்கான அதிபதிகளில் இந்த “குபேர பகவான்” வடக்கு திசைக்கான அதிபதியாக இருக்கிறார். இப்படி பல பெருமைகளுக்கு உரியவராக இருக்கின்ற குபேரனின் அருளை நாம் எப்படி பெறலாம் என்பது குறித்து இங்கே நாம் விரிவாக காணலாம்.

kubera

செல்வத்தின் அதிபதியான குபேரன் பகவான் தனது கையில் ஒரு கீரிப்பிள்ளையை வைத்திருப்பதைப் போன்ற சித்திரத்தை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அதனால் பலரும் குபேர பகவானின் வாகனம் அந்த கீரிப்பிள்ளை தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் குபேர பகவானின் வாகனம் யார் என்றால் “நரன்” என அழைக்கப்படுகின்ற நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான். மனிதர்களுக்கு “செல்வம்” எனப்படும் பணம், பொன் போன்றவற்றின் மீது ஏற்படுகின்ற “ஆசை” தான் குபேர பகவானுக்கு வாகனம். நேர்மையான வழியில் பொருளீட்ட நினைக்கின்ற மனிதர்களுக்கு குபேர பகவான் சிறிது சிறிதாக சேமிப்பை உயர்த்தி, அவர்களை நல்ல செல்வந்த நிலைக்கு உயர்த்துவார். அதேநேரம் தீயவழிகளில் அதிகம் பொருள் சேர்க்கும் நபர்களுக்கு ஆரம்பத்தில் உயரிய செல்வந்த நிலையை அளித்தாலும், திடீரென படு பாதாளத்தில் தள்ளிவிடும் ஆற்றல் கொண்டவராக குபேரன் இருக்கிறார்.

மனிதர்களாக பிறந்துவிட்ட நமது வாழ்வில் பொருள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து, மகிழ்ச்சி தருகின்ற செல்வம் எனும் பணத்தை அருளும் குபேர பகவானின் அருள் நம் அனைவருக்கும் அவசியம் தேவை. அந்தப் பெருமானின் அருட்கடாட்சம் நமக்கும், நமது குடும்பத்திற்கு என்றென்றும் கிடைக்க நாம் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதை இங்கே சற்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

kubera

இந்திய புராணங்கள் இதிகாசங்கள் மற்றும் நான்கு வேதங்கள் அனைத்துமே மனிதன் தெய்வீக அம்சம் நிறைந்தவன் என்றே வலியுறுத்துகின்றன. அப்படியான ஒரு மனிதனை மற்றொரு சகமனிதன் காரணத்துடனோ அல்லது காரணமில்லாமலோ இகழ்வது, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது போன்ற செயல்கள் தெய்வத்தையே அவமதிக்கின்ற போன்றதொரு செயல் என நமது வேதங்கள் கூறுகின்றன. இப்படி சக மனிதர்களை திட்டுகிற மனிதர்கள் செல்வக் கடவுளான லட்சுமி தேவி மற்றும் குபேர பகவான் சாபத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அந்த மனிதனுக்கு இவர்களின் அருட்பார்வை கிடைக்காமல் அவர் வாழ்வில் மிகுந்த செல்வ வளங்கள் ஏற்படாமல் போய்விடும்.

- Advertisement -

முற்காலத்தில் செல்வம் என்பது தங்கம் மற்றும் வெள்ளி காசுகளாக இருந்தது. தற்காலத்தில் ரூபாய் நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை இன்னொரு நபர் முகத்தோல் விசிறி அடித்தல், ரூபாய்நோட்டுகளை ஒருவர் மற்றவருக்கு மரியாதையாக தங்கள் கைகளால் தராமல் தூக்கிப் போடுதல், கால்களில் மிதித்தல், நோட்டுக்களை கிழித்தல், தீ வைத்து எரித்தல் போன்ற செயல்களும் செல்வங்களின் அதிபதியான குபேர பகவானுக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்களாக கருதப்படுகிறது. இத்தகைய காரியங்களைச் செய்பவர்களுக்கு திடீர் செல்வ இழப்பு, விரைவாக வறுமை நிலை போன்றவை ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகிறது.

money

நமது இந்திய கலாச்சாரங்களில் கல்வி, செல்வம், வீரம் அனைத்திற்கும் அதிபதியாக பெண் தெய்வங்களே வழிபடப்படுகின்றனர். அதிலும் ஒரு குடும்பத்தில் தாய், மனைவி, மகள் போன்றோர் மனித வாழ்விற்கு அவசியமான செல்வத்தை தருகின்ற லட்சுமி தேவியின் அம்சங்களாக கருதப்படுகின்றனர். மனிதர்களுக்கு தேவையான அனைத்து வகையான செல்வங்களுக்கும் குபேர பகவான் அதிபதி என்றாலும் அந்த செல்வத்தின் அம்சமாக இருப்பவள் திருமாலின் நாயகியான “லட்சுமி தேவி”. அந்த லட்சுமி தேவியின் பக்தனாக குபேர பகவான் இருக்கிறார். எனவே ஒரு குடும்பத்தில் இருக்கின்ற திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தப்படுதல், கிழிந்த ஒட்டுப் பொட்டு தைத்த ஆடைகளை உடுத்த செய்தல் போன்ற செயல்களும் குபேர பகவா கோபத்தை பெற்று அவரின் அருட்பார்வை அந்தக் காரியங்களை செய்கின்ற நபருக்கோ அல்லது அந்த குடும்பத்திற்கோ நிரந்தரமாக கிட்டாமல் எப்போதும் வறிய நிலை ஏற்படச் செய்துவிடும்.

lakshmi kubera

பிறருக்கு உரிய ஒன்றை திருடுகின்ற செயலை அனைத்து மத நூல்களும், நமது நாட்டின் பண்டைய நீதி நெறி சாத்திரங்களும் கண்டிக்கின்றன. இன்னொரு நபருக்குரிய பொருட்கள் மற்றும் பணத்தை திருடுதல் போன்றவை குபேர பகவான் சாபத்தை பெற்று தரும் செயல்களாகும். இத்தகைய செயல்களை செய்கின்ற நபர் ஒருவர் தனது வாழ்நாளில் எப்போதும் அலைந்து, திரிந்து கஷ்டப்பட்டு பணத்தை ஈட்டுகின்ற ஒரு நிலையை குபேரன் ஏற்படுத்தி விடுவார். எனவே ஒருவர் குபேரனின் அருளை பெறுவதற்க்கு மேற்சொன்ன செயல்களை அறவே தவிர்க்க வேண்டும்.