குபேரரின் பொம்மையை இப்படி சூடு செய்து வைத்தால் அவருடைய மனம் குளிரும். மகிழ்ச்சியில் மனமார நிறைய பணம் காசை உங்களுக்கு வாரி கொடுப்பார்.

- Advertisement -

பெரும்பாலும் நம்மில் நிறைய பேர் வீடுகளில் குபேரரின் பொம்மை இருக்கிறது. நிறைய பேர் வீடுகளில் இதை பிளாஸ்டிக் உண்டியலாக வைத்திருப்பார்கள். நிறைய பேர் இந்த பொம்மையை சிலையாக வைத்து பூஜை அறையில் கூட வழிபடுகிறார்கள். சில பேர் அழகுக்காக ஷோக்கேஸில் குபேரர் பொம்மையை வைத்திருப்பது வழக்கம். உங்களுடைய வீட்டில் குபேரரின் பொம்மை எந்த உலோகத்தில் எப்படி இருந்தாலும் சரி, பின் சொல்லக் கூடிய குறிப்பை பின்பற்றினால் குபேரரின் மனம் மகிழும். அளவில்லா செல்வ வளங்களை உங்கள் வீட்டிற்கு வாரி கொடுத்து விடுவார், கடன் தொல்லை இருந்தாலும் அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவர இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

குபேரரின் பொம்மையை சூடு செய்ய வேண்டுமா. எப்படி என்ற சந்தேகம் எல்லோருக்கும் நிச்சயம் இருக்கும். குபேரருக்கு உகந்த தினம் என்றால் அது வியாழக்கிழமை. வியாழக்கிழமை காலையில் சூரிய உதயமாகும் நேரம் இருக்கும் அல்லவா. அதாவது 6.00 மணி அல்லது 6.30 மணி எந்த நேரத்தை வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். காலை சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் நம்முடைய பூமியில் விழும். அந்த வெளிச்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குபேரரின் பொம்மையை சிறிது நேரம் வைக்க வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் வைத்து பூஜை செய்யக்கூடிய குபேரர் சிலையாக இருந்தாலும் சரி, அந்த பொம்மையை எடுத்து ஒரு தாம்பல தட்டில் வைத்து, சுத்தமான இடத்தில் வையுங்கள். அதாவது வீட்டு மொட்டை மாடி, வீட்டின் கொள்ளை புறம், வீட்டின் வெளிப்பக்கம், பால்கனி எந்த இடமாக இருந்தாலும் சரி, ஒரு ஸ்டூல் போட்டு கூட அதன் மேலே ஒரு தட்டில் இந்த குபேரரை வைக்கலாம். சூரியன் கதிர்வீச்சு சிறிது நேரம் அந்த குபேரரின் பொம்மையின் மேல் விழ வேண்டும்.

பத்து நிமிடங்கள் வைத்தால் கூட போதும். அதிகபட்சம் ஒரு மணி நேரம் வைத்தாலும் தவறு கிடையாது. அதன் பின்பு இந்த பொம்மையை எடுத்து நீங்கள் வழக்கம் போல வீட்டிற்குள் எங்கே வைப்பீர்களோ அந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று இப்படி செய்து வந்தால் குபேரர் மனம் மகிழ்ந்து உங்கள் வீட்டிற்கு செல்வ வளங்களை வாரி வழங்குவார்.

- Advertisement -

குபேரரின் பொம்மையை வீட்டில் எந்த திசையில் எப்படி வைத்தால் மிகவும் நல்லது என்பதை பற்றிய சில குறிப்புகளையும் இப்போது தெரிந்து கொள்வோம். உங்களுடைய வீட்டில் குபேரனின் பொம்மை இருந்தால் அந்த பொம்மையை வடக்கு அல்லது கிழக்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும். குபேரறுது சிலையை ஒரு சிலையாக வைக்காமல் ஜோடியாக, இரண்டு சிலையாக வைப்பது மிக மிக நல்லது. உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் குபேரர் சிலையை வைத்து வழிபாடு செய்து வந்தாலும் பரவாயில்லை. அந்த சிலை அப்படியே இருக்கட்டும்.

புதியதாக வேறொரு குபேரரின் பொம்மையை வாங்கி, வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கலாம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் சிரிக்கின்ற குபேரரின் சிலை நம் கண்களில் பட வேண்டும். முடிந்தவரை குபேரரது பொம்மையின் முன்பு சிலரை காசுகளை நிறைய வைக்க வேண்டும். தாம்பல தட்டில் சில்லறை காசுகளை நிரப்பி அதன் நடுவே குபேரரை நிற்க வையுங்கள். குபேரரின் கால் சிலரை காசுகளில் படும்படி இருக்கக் கூடாது. சிலரை காசுகளை சுற்றி போட்டுவிட்டு நடுவில் குபேரரது பொம்மையை நிற்கவைக்க வேண்டும். குபேரர் உங்களுடைய வீட்டில் மன மகிழ்ச்சியாக நிரந்தரமாக அமர்ந்து உங்களுக்கு தேவையான பணம் காசை மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டே இருப்பார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன முறைகளை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -