வறுமை நீங்கி செல்வம் கொழிக்க பூஜையறையில் இந்த 3 பானைகளை இப்படி வையுங்கள்!

kubera pot

வீட்டில் இருக்கும் வறுமை நீங்க பல்வேறு வழிபாடுகளை நாம் செய்து வருவோம். அனைவருக்குமே வறுமை இல்லாத செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கதான் செய்யும். ஒருவருடைய வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது என்றால் அந்த வீட்டில் தரித்திரம் இருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தரித்திரம் நீங்கி லக்ஷ்மி கடாட்சம் உண்டாக செய்ய வேண்டிய முக்கிய பரிகாரங்களில் ஒன்றுதான் இந்த ‘குபேர பானை வழிபாடு’. அதை எப்படி எளிமையாக செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு சிலருடைய வீடுகளில் எல்லாம் பூஜை அறையில் சென்று பார்த்தால் அங்கு மூன்று பானைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். இதனை குபேர பானை என்று கூறுவார்கள். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொருட்களையும் போட்டு வைப்பது உண்டு. அப்படி போட்டு வைக்கும் பொருட்களுக்கு ஒவ்வொரு பலன்களும் கிடைக்கும்.

இந்த பானை பல்வேறு இடங்களில் அற்புதமான கலை வேலைப்பாடுகளுடன் விற்பனைக்கும் கிடைக்கப் பெறுகின்றன. நம்மால் அதை எல்லாம் வாங்க முடியாவிட்டாலும், மண்பானை கடையில் சென்று மண்பானைகளை சிறிய அளவிலான பானையாக தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். 3 அல்லது 5 ஆகிய எண்ணிக்கைகளில் இந்த பானையை வைப்பது முறையாக இருக்கின்றது.

அவ்வகையில் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் சிறிய அளவிலான பானைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை குபேர பானை செய்ய உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வண்ணம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சாதாரணமாகவும் வைத்துக் கொள்ளலாம். அடியில் இருக்கும் பானை பெரிய அளவிலும், அதற்கு அடுத்து இருக்கும் பானை சிறிய அளவிலும், அதற்கு மேல் இருக்கும் பானை இன்னும் சிறிய அளவிலும் வைத்திருக்க வேண்டும். அடியிலிருக்கும் பானைக்கு கீழாக பிடிமானத்திற்கு சிலர் ஸ்டாண்டுகள் வைப்பது உண்டு. உங்கள் கற்பனை வளத்திற்கு ஏற்ப குபேர பானை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குபேர பானையின் முதல் பெரிய பானையில் அரிசியை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பானையில் அன்னபூரணியை நாம் ஆவாஹனம் செய்வதாக அர்த்தமாகிறது. இதனை பானையின் கழுத்து அளவிற்கு முழுமையாக நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு அடுத்து இருக்கும் நடுத்தர பானைக்குள்ளே பருப்பு வகைகளை போட்டுக் கொள்ளலாம். துவரம்பருப்பு போடுவது சிறப்பானது. கழுத்து அளவிற்கு நிரம்பும் படியாக பருப்புகளை போட்டு வைத்தால் வறுமை இல்லாத வாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம்.

அதுக்கு மேலே இருக்கும் சிறிய பானையில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எண்ணிக்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு தான் போட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இந்த பொருட்கள் யாவும் ஒன்றாக இணையும் பொழுது அங்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

pongal-panai

இத்தகைய பானைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தினம்தோறும் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது எப்படி தூபம் காண்பித்து வருகிறீர்களோ! அதே போல இதற்கும் தீபம், தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ நிலை உயரும். குபேர பானை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் இருப்பது அந்த வீட்டின் செல்வ வளத்திற்கு மிகவும் நல்லது.