குபேர பகவானை வசியம் செய்வதில் உள்ள தந்திரம் இதுதானோ! பணத்தை சேர்ப்பதில், வட இந்தியர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய சூட்சமத்தை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Panam

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்கிற ஒரு சொல் வழக்கு நம்மில் பலர் அரசியல் மேடை பேச்சுகளில் கேட்டிருப்போம். அரசியல் மற்றும் பொருளாதார சமூக காரணங்களை தவிர்த்து விட்டு பார்க்கும் போது வட இந்தியர்கள், தென்னிந்தியர்களை காட்டிலும் மிக செல்வச் செழிப்பாக வாழ்வதற்கு, அவர்கள் பின்பற்றுகின்ற சில ரகசிய சூட்சும ஆன்மீக வழிகள் என்னவென்று நாமும் தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றும் பட்சத்தில் நமக்கும் செல்வ வளங்கள் நிரம்பிய வாழ்க்கை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

kuberan

வடக்கு திசைக்கு அதிபதி செல்வங்களின் அதிபதி “குபேர பகவான்”. அந்த குபேரன் நமது இந்திய நாட்டின் வடக்கு திசைக்கு அதிபதியாக வீற்றிருக்கின்ற காரணம் தான் என்னவோ, தென் இந்தியாவில் வாழ்கின்ற மனிதர்களை காட்டிலும் வட இந்தியாவில் வாழும் மனிதர்கள் அதிகம் செல்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என ஒரு சில ஆன்மீக ஆய்வாளர்களின் ஐயமாக உள்ளது. அப்படி வட இந்தியர்களிடம் மட்டும் அதிகம் அதிகம் செல்வம் சேருவதற்கான “சூட்சம ரகசியங்கள்” சிலவற்றை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நாம் உண்கிற உணவில் இருக்கின்ற ஆறு வகையான சுவைகளில் சர்க்கரை, வெல்லம் போன்ற இனிப்பு பொருள் அதிகம் கலந்த உணவுப் பொருட்களை உண்கின்ற பொழுது நம்மை அறியாமல் நமது உடலிலும் மனதிலும் ஒரு விதமான அமைதியும், மகிழ்ச்சி தன்மையும் ஏற்படுவதை அனுபவித்திருப்போம். இனிப்புச் சுவை நிறைந்த உணவுப் பொருட்களுக்கு நவகிரகங்களில் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் காரகத்துவம் வகிக்கிறார். இனிப்பு சுவை நிறைந்த உணவுப் பொருட்களை பிறருக்கு தானமாகவும், அன்பளிப்பாகவும் கொடுக்கும் வழக்கம் தங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியும், மன மகிழ்ச்சியும் மற்றவர்களின் வாழ்வில் ஏற்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கம் கொண்ட தத்துவத்தின் அடிப்படையில் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமாக உள்ளது. இந்த இனிப்பு தானம் மனிதர்களுக்கு சுகங்கள் அருளும் நவக்கிரக நாயகனான சுக்கிரனின் அருளாசியை பரிபூரணமாக பெற்றுத் தந்து நமக்கு செல்வச்செழிப்பை அதிகரிக்கிறது. இன்றும் வட இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விசேஷ தினங்களில் சந்திக்கின்ற பொழுது, இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.

kasi

நம் முன்னோர்கள் வகுத்த தர்ம செயல்களில் மிக அதிகமான புண்ணிய பலன்களை பெற்றுத் தரக்கூடியதாக கூறப்படுவது பிற மனிதர்களின் பசியை போக்குகின்ற அன்னதானம் இடுவதும் மற்றும் சொந்த, பந்தங்கள் துணையின்றி அனாதை போன்று இறந்து போகின்ற நபர்களின் இறந்த உடல்களுக்கு ஈமைச் சடங்குகளை செய்து அவற்றை அடக்கம் செய்வதும் ஆகும். செல்வச் செழிப்பாக இருக்கின்ற வட இந்தியர்கள் பலர் இந்த இரண்டு தர்ம காரியங்களையும் பிறர் அறியாத வண்ணம் ரகசியமாக செய்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அதிலும் அனாதை பிணங்களுக்கு ஈமச் சடங்குகள் செய்கின்ற காரியத்தை மோட்சபுரி என அழைக்கப்படுகின்ற “காசி” எனும் “வாரணாசி” நகரில் செய்கின்ற போது காசி நகரின் நாயகனாகிய “காசி விசுவநாதர்” என்கிற பெயரில் அழைக்கப்படுகின்ற சிவபெருமானின் கருணையை பெற்று, தங்கள் வம்சத்தின் பல தலைமுறையினரால் செய்யப்பட்ட பாவங்கள் நீங்குவதோடு, மிக அதிக அளவில் புண்ணியங்கள் சேர்த்து, அவர்களின் தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறையினரும் மென்மேலும் செல்வச் செழிப்பான வாழ்க்கையை பெற உதவுகிறது.

ஒரு ஆணின் சரிபாதி பெண். நம் நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பெண்கள் அனைவரையும் தெய்வத்தின் அம்சங்களாக போற்றி துதிக்கிறது. அத்தகைய பெண் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக வாசம் செய்கிறார்கள். “எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கு தெய்வம் வாசம் செய்கிறது” என ஒரு பண்டைய சாஸ்திர நூலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே பண்டிகை காலங்களிலும், உங்கள் வீடுகளில் நடைபெறுகின்ற சுபகாரியங்களின் பொழுதும் உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்ற உடன் பிறந்த சகோதரிகள் மன மகிழ்ச்சி அடையும் வகையில், அவர்களுக்கு புடவை, இனிப்பு மற்றும் அவர்களுக்கு இன்ன பிற விருப்பமான பொருட்களை அன்பளிப்பாக அளித்து அவர்களை மகிழ்வுற செய்வதால், முப்பது முக்கோடி தேவர்கள் மற்றும் தெய்வங்களின் அருளாசிகள், அதிலும் குறிப்பாக மங்களங்கள் அனைத்தையும் அருளுகின்ற தெய்வமான “லட்சுமிதேவி” மிகவும் மகிழ்ந்து அனைத்து வகையான செல்வங்களையும் அருள் மழையாக உங்கள் வீடுகளில் பொழிய அருள்புரிவாள்.