தாங்க முடியாத குடும்ப கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் இதை மட்டும் செய்தால் போதும். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் பிறக்கும்.

sivan-curd-rice
- Advertisement -

கையில் எவ்வளவுதான் காசு இருந்தாலும் ஒரு சில பேருக்கு குடும்பத்தில் நிம்மதி இருக்காது. கணவருக்கு பிரச்சனை, அது போனால் குழந்தைகளுக்கு பிரச்சனை, அது போனால் மாமனார் பிரச்சனை, என்று குடும்ப பிரச்சனையால் ஒரு சில பேருக்கு நிம்மதி கெட்டுப் போகும். சில பெண்களுக்கு கணவருடனே ஒற்றுமையாக வாழ முடியாத சூழ்நிலை இருக்கும். அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, மன நிம்மதி கெட்டுப் போக காரணத்தை தேடிக்கணுமா என்ன. என்னதான் அனுசரித்து சென்றாலும் சில சமயங்களில், பெண்கள் குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவார்கள்.

என்ன செய்வது. கையில் தேவைக்கு ஏற்ப காசு இருக்குது, சொந்த வீடும் இருக்குது, ஆனா இந்த குடும்ப பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய எந்த ஒரு வழியும் கிடைக்கவில்லை என்பவர்கள் கடவுளின் பாதங்களைத் தான் சரணடைய வேண்டும். குடும்பத்தில் தீராத பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் இறைவழிபாடு செய்ய வேண்டியது தான் ஒரே வழி.

- Advertisement -

குடும்ப கஷ்டம் தீர சிவன் கோவில் பரிகாரம்:
ஒரு முறை குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல், ஒரு குடும்பத்தை சேர்ந்த தலைவி, மகா பெரியவா அவர்களிடம் தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் கண்களில் தண்ணீரோடு சொல்லி அழுதி புலம்பி இருக்கின்றாள். இந்த பிரச்சனைகளை எல்லாம் செவி கொடுத்து கேட்ட மகா பெரியவா, இறுதியாக அந்த பெண்மணிக்கு சொன்ன ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

அந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்த, அந்த பெண்ணுக்கு ஒரு சில நாட்களில் குடும்ப கஷ்டம் தீர்ந்து, குடும்பத்தில் சந்தோஷமும் பிறந்தது. சரி, அது என்ன பரிகாரம் என்பதை நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோமா. தினமும் நீங்கள் சமைப்பதற்கு, சாப்பாட்டுக்கு அரிசி மூட்டையில் இருந்து அரிசி எடுப்பீங்க அல்லவா.

- Advertisement -

நீங்க உங்க குடும்பத்திற்காக சமைப்பதற்காக எடுத்த அரிசியிலிருந்து ஒரே ஒரு கைப்பிடி அளவு அரிசியை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு சேமித்து வாருங்கள். ஒரு கிலோ, இரண்டு கிலோ அது உங்கள் சௌகரியம். எவ்வளவு வேண்டுமானாலும் சேரட்டும் அளவு என்பது உங்களுடைய விருப்பம். (இப்படி தொடர்ந்து 48 நாட்கள் குடும்ப தலைவியின் கையால் ஒரு கைப்பிடி அரிசி அன்னதானத்திற்காக எடுத்து வைக்கணும்).

அதை உங்கள் கையாலேயே தயிர் சாதம் சமைக்க வேண்டும். முடிந்தால் பசு தயிர் வாங்கி, இந்த தயிர் சாதத்தை சுத்த பத்தமாக பக்தியோடு குடும்பத் தலைவியின் கையாலேயே வீட்டிலேயே தயார் செய்து விடுங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு இந்த தயிர் சாதத்தை கொண்டு போய் அந்த சிவபெருமான் சன்னிதானத்தில் வைத்து நிவேதனம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த வழிபாட்டிற்கு சென்றாலும் தவறு கிடையாது. சிவபெருமானிடம் மனம் உருகி கேட்டுக் கொள்ளுங்கள். வேண்டுதல் வையுங்கள். உங்களுடைய குடும்பத்தில் எப்போதும் ஒற்றுமை இருக்கணும். சந்தோஷம் இருக்கணும். பிரச்சனை வரக்கூடாது என்று. பிறகு அந்த தயிர் சாதத்தை எடுத்து வந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

கோவிலுக்கு வெளியே சாப்பிட முடியாமல் யாசகம் கேட்டு இருப்பார்கள் அவர்களுக்கும் கொடுக்கலாம். அல்லது ஏதாவது ஒரு ஆசிரமம், முதியோர் இல்லத்திற்கும் கொண்டு போய் தானம் செய்யலாம். இந்த தயிர் சாதத்தை உங்கள் கையாலேயே பசியோடு இருப்பவர்களுக்கு தானம் கொடுக்கும்போது உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.

இதையும் படிக்கலாமே: வீடு மனை மக்கள் செல்வம் என ராஜபோக வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் நாளை ஆடி கிருத்திகை அன்று தவறாமல் முருகருக்கு இந்த மூன்று தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்.

ஒருமுறை இந்த அன்னதானத்தை செய்து விட்டு விட்டுடாதீங்க. தொடர்ந்து இந்த பழக்கத்தை வச்சுக்கோங்க. உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமோடு சந்தோஷமாக வாழும் என்பது குறிப்பிடத்தக்கது. மகா பெரியவா சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -