- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுடும்ப சுபிட்சத்தை அதிகரிக்கும் ஆடிப்பூர தீபம்

குடும்ப சுபிட்சத்தை அதிகரிக்கும் ஆடிப்பூர தீபம்

- Advertisement -

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திர நாள் அன்று தான் ஆண்டாள் அவதரித்தாள் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் தான் அனைத்து பெண் தெய்வங்களுக்கும் வளைகாப்பு என்பது நடைபெறும். அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அந்த வளைகாப்பிற்காக நம்மால் இயன்ற அளவு வளையலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்போம். ஒரு சிலர் வீட்டிலேயே தங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் சிலைக்கோ படத்திற்கோ வளையலால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். எந்த வழக்கமாக இருந்தாலும் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது அவர்களின் குடும்பத்தில் இருக்கக்கூடிய சுபகாரிய தடை நீங்கி சுபிக்ஷம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடிப்பூர தீபம் வழிபாடு

பொதுவாகவே ஆடிப்பூரம் நாளன்று திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்றும் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்பட வேண்டும் என்றும் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இப்படி சுபகாரிய தடையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தங்கள் கைப்பட அம்மனுக்கு வளையலை வாங்கி தருவதன் மூலம் அடுத்த வருடம் ஆடிப்பூரத்திற்குள்ளாகவே அவர்களுடைய சுபகாரிய தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு ஏதோ ஒரு கர்ம வினையின் காரணமாக இப்படி செய்தும் சுப காரிய தடை விலகாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு இரண்டு வளையல் வேண்டும். இந்த வளையல் மஞ்சள், சிவப்பு, பச்சை இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாக இருக்க வேண்டும். அடுத்ததாக புதிதாக ஒரு அகல் விளக்கு வேண்டும். இரண்டு வளையலையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வளையலை மட்டும் லேசாக வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ தள்ளி வைக்க வேண்டும். இப்பொழுது இரண்டு வளையல்களுக்கும் பொதுவான ஒரு இடம் என்று ஒரு இடம் வரும். அந்த இடத்தில் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு யாருக்கு சுபகாரிய தடை இருக்கிறதோ அவர்கள் கைப்பட அந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அவர்கள் தீபம் ஏற்ற மாட்டார்கள் என்னும் பட்சத்தில் அவர்களின் தாய் அந்த தீபத்தை ஏற்றலாம்.

பிறகு அந்த தீபத்திற்கு ஏதாவது ஒரு வாசனை மிகுந்த மலரை வைத்து நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் தெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை ஜூலை மாதம் 28ஆம் தேதி காலை 6:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள் ஏற்றலாம் அல்லது மாலை 6:00 மணியிலிருந்து எட்டு மணிக்குள் ஏற்றலாம். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரம் எரிய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்துக் கொள்ளலாம். தீபத்தை குளிர வைத்த பிறகு அந்த அகல்விளக்கிற்கு கீழ் இருக்கக்கூடிய வளையலை வீட்டில் யாருக்கு சுபகாரிய தடைகள் இருக்கிறதோ அவர்கள் கையில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி முழுமனதோடு அம்மனை நினைத்து நாம் ஏற்றுக் கூடிய இந்த தீபம் நம் வீட்டில் இருக்கக்கூடிய சுபகாரிய தடைகளை நீக்கி சுபிட்சத்தை அருளும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நாளை 28-07-2025 ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு

ஆடிப்பூர நாளன்று எந்தெந்த முறைகளில் வழிபாடு செய்கிறோமோ பரிகாரம் செய்கிறோமோ அதோடு சேர்த்து இந்த ஒரு தீபத்தையும் ஏற்றி வைக்க கண்டிப்பான முறையில் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆவதோடு குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்