உங்கள் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் நிலைத்திருக்க புது வீடு பால் காய்ச்சும் பொழுது இதனை மட்டும் தவறாமல் செய்திடுங்கள்

new-home
- Advertisement -

ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் அவரை சுற்றி உள்ள சூழ்நிலை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதிலும் அதிகப்படியாக அவர்கள் இருக்கும் இடமான வீடு, தொழில் செய்யும் இடம் இவை இரண்டுமே மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனநிறைவுடன் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை இன்பமாய் வாழ முடியும். இவ்வாறு இல்லாமல் போகின்ற இடத்திலும், இருக்கின்ற இடத்திலும் எப்பொழுதும் பிரச்சனையாக இருந்து கொண்டிருந்தால் அவர்கள் வாழும் வாழ்க்கையே கொடுமையானதாக மாறிவிடும். இவ்வாறு ஒருவரை சுற்றி சந்தோஷம் நிலைத்திருப்பது அவர்களுக்கு கிடைத்த வரமாகும். இவ்வாறு ஒவ்வொருவரின் குடும்பத்திலும் சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க புது வீடு பால் காய்ச்சும் பொழுது இந்த ஒரு செயலை மட்டும் கட்டாயம் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒருவர் குடும்பமாக சேர்ந்து வாழ ஒரு அழகான வீடு வேண்டும் அது அனைவருக்கும் சொந்த வீடாக இருப்பதில்லை. பலரும் வாடகை வீட்டில் தான் இருக்கின்றனர். எனவே வாடகை வீட்டிற்கு புதியதாக செல்லும் பொழுது அந்த வீடு நமக்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும். அங்கு இருக்கும் அக்கம், பக்கத்து வீட்டாரும் நம்முடன் நல்ல முறையாக நடந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதிலும் சொந்த வீடாக இருந்தால் நாம் ஒரு முறை அங்கு சென்று விட்டால் நாம் வாழ்நாள் முழுவதையும் அங்குதான் செலவிட போகின்றோம். எனவே அந்த வீடு நமக்கு மன நிறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு பார்த்து பார்த்து அனைத்தையும் செய்து அழகான வீடு கட்டி, அங்கு சந்தோஷம் மட்டும் இல்லை என்றால் வாழும் வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவே ஒரு மனிதனின் இன்றியமையாத விஷயங்களில் வீடும் ஒன்றாக மாறியுள்ளது. ஆகவே புதிய வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பசு மாட்டின் பாலை வைத்து அதனை பொங்கி வழிய செய்வது அனைவரின் வழக்கமான ஒரு பாரம்பரிய முறையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பால் எப்படி பொங்கி வழிகிறதோ, அதுபோல நமது குடும்பம் என்பது மகிழ்ச்சியாக நிறைந்திருக்கும் என்பது தான் அர்த்தமாகும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் கோமாதாவின் அருள் நமக்குக் கிடைத்துவிடும். கோமாதாவின் அருளுடன் சேர்த்து மகாலட்சுமி தேவியின் அருள் கிடைத்து விட்டால் நமது வீடு எப்போதும் சுபிட்சத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு முதலில் பால் காய்ச்சும் பாத்திரத்தை பித்தளை அல்லது வெள்ளி உலோகத்தினால் ஆனதாக எடுக்க வேண்டும். பிறகு பசும்பாலை பாத்திரத்தில் ஊற்றி விட்டு, அதனுள் ஒரு வெள்ளி காசை சேர்க்கவேண்டும்.

பால் பொங்கி வழியும் போது அந்த வெள்ளி காசு பாத்திரத்தினுள் இருக்க வேண்டும். பிறகு பாலில் இருக்கும் வெள்ளிக் காசை எடுத்து விட்டு பாலை அனைவருக்கும் பரிமாறி கொடுக்கலாம். இந்த வெள்ளிக் காசை எப்பொழுதும் உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்துக் கொண்டு வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு பால் காய்ச்சும் பொழுது அதனுள் போட்டு எடுக்கலாம்.

- Advertisement -