- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வத்தை இப்படி முறையாக வழிபட்டால் 5 வாரங்களில் குலதெய்வம் நம்மை தேடி வந்து நம்முடைய கஷ்டங்களை...

குலதெய்வத்தை இப்படி முறையாக வழிபட்டால் 5 வாரங்களில் குலதெய்வம் நம்மை தேடி வந்து நம்முடைய கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கும்.

- Advertisement -

சிலருக்கு வீட்டில் பண கஷ்டம், மன நிம்மதியின்மை, தொழிலில் நஷ்டம், திருமணம் தள்ளி செல்லுதல், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுதல், உறவினர்களிடம் மனக்கசப்பு உண்டாகுதல் இவ்வாறு பல பிரச்சனைகள் குடும்பங்களில் நிலவிக் கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் தெரியாமல் நாம் மன நிம்மதிக்காக பல கோவில்களுக்கு சென்று வருவதும் நமக்குப் பிடித்த தெய்வங்களை வணங்கியும் பிரச்சனைகளுக்கு வழி தேடிக் கொண்டிருப்போம். ஆனால் இப்பிரச்சனைகள் எல்லாம் நம்மை விட்டு அகல ஒரே ஒரு தெய்வத்தை வணங்கினால் மட்டும் போதும் அதைத் தெரிந்துகொள்ள மேலும் தொடருவோம்.

kuladheivam 1

நம்முடைய எல்லா துன்பங்களையும் தன் துன்பமாக நினைத்து முறையாக அழைத்தவுடன் நமக்காக ஓடோடி வரும் தெய்வம் ஒன்று உண்டு என்றால் அது தான் குலதெய்வம். நமக்கு பிடித்தமான தெய்வங்கள் பல இருந்தாலும் முதன்மைக் கடவுளான விநாயகரையும் நமது குலதெய்வத்தையும் வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்குவது தான் முறை. வருடத்திற்கு இரு முறை அதாவது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். குலதெய்வ கோவில் மிகவும் அருகில் இருந்தால் வாரம் ஒரு முறை சென்று கூட நெய் தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குல தெய்வத்தை வணங்கும் முறையில் முதலில் நமக்கு தேவைப்படுவது ஒரு மண் குடுவை மற்றொன்று தீபம் ஏற்றும் விளக்கு. மிகவும் எளிமையான முறையே தெய்வத்திற்கு பிடித்தது. மிகவும் எளிமையான இடத்திலே தெய்வம் நிறைந்திருக்கும்.

- Advertisement -

முதலில் மண் குடுவையையும் விளக்கையும் நீரில் நன்கு சுத்தம் செய்து, துடைத்து விட்டு பின்னர் மண் குடுவையின் மீது மஞ்சள் பூசி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கும் முறையில் பட்டை அல்லது நாமமிட்டு, அதனுள் பாதி குடுவை நிறையும் வரை தவிடு சேர்த்து பின்னர் ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் 27 அல்லது 29 ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து அதனை கட்டி முடித்து விட்டு அதன் மீது ஒரு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதன் மீது ஒரு வாசனை பூவை வைத்து அந்த மண் பானைக்குள் வைத்து விடவேண்டும்.

kuladeiva-deepam

பிறகு மண் குடுவையின் மீது தட்டை வைத்து மூடி, அதன் மீது தீபம் ஏற்றும் விளக்கில் நெய் ஊற்றி, தாமரை தண்டு அல்லது பஞ்சு திரி வைத்து தீபமேற்ற வேண்டும். இந்த மண் குடுவையை வெறும் தரையில் வைக்காமல், ஒரு காப்பர் அல்லது பித்தளை தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து, அதன் மீது மண் குடுவையை வைக்கவேண்டும்.

- Advertisement -

குடுவையை சுற்றி வாசனை மலர்களை வைக்க வேண்டும். பின்னர் தீபமேற்றி அதனை நமது வீட்டின் பூஜை அறையில் குபேர மூலையில் வைத்து வழிபட வேண்டும். வாரம் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி வர வேண்டும். இந்த மண் குடுவையும் அதன் மீது நாம் வைக்கும் விளக்கையும் குடுவைக்குள் போடும் தவிடையும் வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஏதேனும் நமக்கு வேண்டுதல் இருப்பின் அதனை மனதில் நினைத்துக்கொண்டு 5 வாரங்கள் சனிக்கிழமை அன்று காலை எட்டிலிருந்து 9 மணிக்குள் தீபம் ஏற்றி வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். இந்த விளக்கை வாரவாரம் நாம் தொடர்ந்து ஏற்றி வர குலதெய்வம் நமது வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்யும். குல தெய்வம் நமது வீட்டில் இருக்குமேயானால் நமது குடும்பத்திற்கு எல்லாவிதமான சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

kula dheivam

குலதெய்வ வழிபாடு நமது தலைமுறைகள் சிறப்பாக வாழ வழி வகுக்கும். நமக்கு ஒரு பிரச்சனை எனில் குலதெய்வத்தை நினைத்து என்னம்மா இது எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இதை சரி செய்து தா என்று சொல்லி நாம் தீபம் ஏற்றி வர அந்தப் பிரச்சனை விரைவில் சரியாகும். எப்போதும் நாம் விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு, குலதெய்வத்தை வணங்கிய பின்னர் நமக்குப் பிடித்தமான தெய்வத்தை வணங்கவேண்டும். இந்த தீபம் ஏற்றும் முறை தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றங்களை நம்மால் உணர முடியும்.

சற்று முன்