- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சனைகள் நீங்கி சுபிக்ஷம் பெற குலதெய்வ தீபம்

பிரச்சனைகள் நீங்கி சுபிக்ஷம் பெற குலதெய்வ தீபம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சினை என்பது சர்வ சாதாரணமே. அந்த பிரச்சினையிலிருந்து வெளியில் வருவது தான் அவர்களுடைய வாழ்க்கையாகவே திகழும். ஒரு பிரச்சினையிலிருந்து வெளிவந்த பிறகு மற்றொரு பிரச்சனை வருகிறது என்றால் அந்த பிரச்சினைகளை நாம் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு பிரச்சனை வந்தவுடன் தொடர்ச்சியாக பல பிரச்சினைகள் வந்து நம்மை தலை தூக்க விடாமல் அமுக்கும் பொழுது என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுங்கிப் போய் இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்வதுதான் நம்முடைய குலதெய்வம். நம்முடைய குலதெய்வத்திற்கு எந்த முறையில் தீபம் ஏற்று வழிபட்டால் பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக இருக்கும் வாழ்க்கை சுபிட்சமாக மாறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். குலதெய்வத்தின் அருளால் தான் அனைவருக்குமே நன்மைகள் நடைபெறுகிறது. குலதெய்வத்தை ஆண் குலதெய்வம் பெண் குலதெய்வம் என்று இரண்டு வகைகளில் பிரிக்கலாம். ஆண் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பெண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில் பௌர்ணமி தினத்தில் வழிபடுவது என்பது சிறப்பு.

- Advertisement -

உங்களுடைய குலதெய்வம் எந்த தெய்வமோ அந்த தெய்வத்திற்கு ஏற்ற தினத்தில் அந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். வழிபட்டால் மட்டும் போதுமா? நம்முடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் அதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் நாம் ஒரு தீபத்தை ஏற்ற போகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணமாக திகழக் கூடியவர்கள் நவகிரகங்களே. இந்த நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கும், பிரச்சனைக்கும் மேல் பிரச்சினைகளை சமாளித்து வெளியில் வருவதற்கும், சுபிட்சமான நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கும் நாம் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

இதற்கு ஒரு வாழை இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பச்சரிசியை கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு நல்ல தேங்காயாக பார்த்து ஐந்து தேங்காயை வாங்கி அதை சரிசமமாக உடைத்து அதிலிருந்து 9 தேங்காயை மூடிகளை மட்டும் எடுத்து பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். நவகிரகங்களின் அடிப்படையில் மூன்றுக்கு மூன்று என்ற வரிசையிலும் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வாழை இலைக்கு ஏற்றார் போலும் வைக்கலாம்.

இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி ஒரே ஒரு பஞ்சு திரியை போட்டு 9 தேங்காய் தீபங்களை ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றிவிட்டு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய மன வேதனை என்னவோ மனக்குமுறல் என்னவோ அதை அப்படியே குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து விட வேண்டும். குறைந்தது 10லிருந்து 20 நிமிடமாவது அங்கேயே அமர்ந்து குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். மேலும் நல்ல முன்னேற்றகரமான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே சகல நன்மைகள் தரும் ஆடி அமாவாசை

எவ்வளவோ செலவுகள் செய்து எவ்வளவோ பரிகாரங்கள் செய்பவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த முறையில் தீபம் ஏற்றி பாருங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றும் அற்புதமான தீபமாக இந்த தீபம் திகழும்.

சற்று முன்