குலதெய்வத்தை நினைத்து, குலதெய்வத்திற்காக இதை மட்டும் செய்யுங்கள் போதும். கைக்கு வரும் வருமானம், வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கும்.

money
- Advertisement -

என்ன பரிகாரம் செய்தாலும் சரி, பணத்தை எவ்வளவு பத்திரப்படுத்தி வைத்தாலும் சரி, கையில் பணம் சேமிப்பில் தங்குவது கிடையாது. செலவு ஆகிக்கொண்டே இருக்கிறது என்பவர்கள் மூன்று மாதம் தொடர்ந்து இந்த ஒரு வழியை மட்டும் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்கள் கைக்கு வரக்கூடிய வருமானம் வீண் விரயம் ஆகாது. பணம் சேமிப்பில் தங்கும். அதே சமயம் மொத்த காசும் செலவாகாமல் சேமிப்பில் இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் அது நிச்சயம் நடக்காது.

நம் கைக்கு வரும் பணம் நம்முடைய தேவைக்கு ஏற்ப செலவு ஆகவேண்டும். அந்தப் பணம் வீண் விரையம் தான் ஆகக் கூடாது. (வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு ஆகக்கூடாது என்று நினைப்பது தவறு. செலவு செய்யாமல் வைத்துக்கொள்ள காசு எதற்கு) நீங்கள் மாதம் ஒருமுறை சம்பளம் வாங்குபவர்கள் ஆக இருந்தாலும் சரி, தினசரி கூலி வாங்குபவர்கள் ஆக இருந்தாலும் சரி, வாரக் கூலி வாங்குபவராக இருந்தாலும் சரி உங்களுக்கு வருமானம் வரும் போது அதிலிருந்து, வருமானமாக உங்கள் கைக்கு வந்த தொகையிலிருந்து, உங்களால் முடிந்த ஒரு தொகையை எடுத்து குல தெய்வத்தின் பாதங்களில் வைக்க வேண்டும்.

- Advertisement -

நிச்சயமாக நம் வீட்டில் நம் வீட்டு குல தெய்வத்தின் திரு உருவத்தை, படமாகவோ சிலையாகவோ கட்டாயம் வைத்திருப்போம். ‌அந்த தெய்வத்தின் திரு உருவ படத்திற்கு முன்பாக ஒரு சிறு தொகையை உங்களால் இயன்ற அளவு 10 ரூபாயாக இருந்தாலும் சரி அந்த தொகையை வைத்து விட்டு, எனக்கு கிடைத்த வருமானம் எக்காரணத்தைக் கொண்டும் வீண் விரயமாக கூடாது என்று உங்கள் வீட்டு குல தெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து கொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் எடுத்து வைக்கக் கூடிய இந்த காணிக்கையை வருடத்திற்கு ஒருமுறை கொண்டுபோய் உங்களுடைய குலதெய்வ கோவிலில் செலுத்திவிடுங்கள். கட்டாயம் வருடத்திற்கு ஒருமுறை நம்முடைய குல தெய்வத்தை தரிசனம் செய்ய, குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு செல்வோம். அப்போது இந்த காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குலதெய்வ கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.

- Advertisement -

ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் இருந்தாலும் கூட, இப்போது பணத்தை அனுப்புவதற்கு எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டது. அதில் ஒரு வழியில் உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு உங்கள் கையில் சேர்த்து வைத்திருக்கும் சம்பளப் பணத்தை கட்டாயமாக அனுப்பி வைத்துவிட வேண்டும்.

pooja-room

நீங்கள் எடுத்து வைக்கக் கூடிய தொகை சிறு தொகையா, பெரிய தொகையா என்பதில் கணக்கே கிடையாது. எவ்வளவு நம்பிக்கையுடன் குலதெய்வத்திடம் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்து இருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை தான் உங்களுக்கு பலனை கொடுக்கும்.

pooja-room1

சில கோவில்களில் எல்லாம் மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை அன்னதானம் செய்யும் பழக்கம் இருக்கும். சில கோவில்கள் தினசரி அன்னதானம் நடக்கும். அந்த அன்னதானத்திற்கு, உங்கள் குலதெய்வ கோவிலுக்கு, உங்களால் இயன்ற அளவு பணத்தை கொடுத்தாலும் நம் குடும்பத்திற்கும் மிகவும் நல்லது. மேல் சொன்ன விஷயங்களை, முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள். மூன்றே மாதத்திற்குள் உங்களுடைய வருமானம் சேமிப்பில் தங்கத் தொடங்கிவிடும். பணக்கஷ்டம் படிப்படியாக குறையும். வாழ்வில் நிறைய ஏற்றங்கள் ஏற்படும். நம் குலம் காக்கும் குல தெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, எல்லோருக்கும் நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்துடன்  இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -