குலதெய்வ வழிபாட்டு முறை.

kuladheiva valipadu
- Advertisement -

எந்தவித நல்ல செயல்களும் நடக்கவில்லை. எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும் அந்த பரிகாரங்கள் பழிக்கவில்லை. ஜாதகப்படி எதுவும் நடக்கவில்லை. கிரக நிலைகளின் அடிப்படையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று வாழவே விருப்பமில்லாமல் விரக்தியில் இருப்பவர்கள் கூட நல்ல நிலைக்கு வருவதற்கு குலதெய்வத்தை வழிபட வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் விரக்தியில் இருக்கும் நபர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய குலதெய்வ வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

தெய்வங்களில் மிகவும் சிறப்பான அதே சமயம் நினைத்தவுடன் வரக்கூடிய தெய்வமாக கருதப்படுபவர்கள் தான் குலதெய்வங்கள். ஒவ்வொரு குலத்திற்கும் அந்த வம்சாவளிக்கு என்று ஒரு தனிப்பட்ட தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தை குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது நேரில் சென்று வழிபட்டு வர வேண்டும். எப்பேர்ப்பட்ட தடைகள் வாழ்க்கையில் இருந்தாலும் அந்த தடைகளை தகர்த்தெறிவதற்கு குலதெய்வத்தின் அருள் கண்டிப்பான முறையில் தேவைப்படும்.

- Advertisement -

வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்களை கூட நடக்க வைக்கும் சக்தி வாய்ந்த கடவுளாக தான் குலதெய்வம் திகழ்கிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் மற்ற தெய்வங்களின் அருளை நம்மால் பெற முடியும். மேலும் நாம் செய்த பரிகாரங்கள் அனைத்தும் பலிப்பதற்கு குலதெய்வத்தின் அருள் கண்டிப்பாக தேவைப்படும். அதனால் தான் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் எந்த ஒரு வழிபாட்டை மேற்கொள்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக குலதெய்வத்தின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

சரி இப்பொழுது பதிவிற்கு போவோம். குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. அப்படி குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு நாம் செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையைப் பற்றி பார்ப்போம். தங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக வளர்பிறையில் வரக்கூடிய ஒரு சுப முகூர்த்த நாளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த சுப முகூர்த்த நாளில் வீட்டில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் புகைப்படத்திற்கு முன்பாக பிரம்ம முகூர்த்த வேளையில் மாவிளக்கு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பெண் தெய்வங்களாக இருந்தால் குங்கும அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு கூறியதாக இருக்கும். இப்படி தொடர்ந்து 90 நாட்கள் வழிபட்டு வர எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து நல்ல பல முன்னேற்றங்களை குலதெய்வம் அருள் செய்யும். குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் பழனி முருகனின் புகைப்படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் புகைப்படத்திற்கு முன்பாகவோ மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதேபோல் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் எந்த ஒரு செயலில் ஈடுபடுவதாக இருந்தாலும், காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கு முன்பாகவும் குலதெய்வத்தை நினைத்து விட்டு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக அமையும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க விநாயகர் வழிபாடு.

இந்த ஒரே ஒரு தீபத்தை மட்டும் நம் குலதெய்வத்திற்கு நாம் ஏற்றி வழிபட்டு குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

- Advertisement -