இந்த வாசம் உங்களுடைய வீட்டில் எப்போதாவது வீசி இருக்கின்றதா? அப்படின்னா நிச்சயமா உங்க வீட்டில் குலதெய்வ நடமாட்டம் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

சில அறிகுறிகளை வைத்து தெய்வங்கள் நம் வீட்டில் வாசம் செய்வதை நம்மால் உணர முடியும். சில அறிகுறிகளை வைத்து நம்முடைய வீட்டில் துஷ்ட சக்திகள் குடிகொண்டுள்ளது என்பதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். நம்மில் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் மனதளவில் எழும். ‘திடீர் திடீரென்று சில வாசம் எதிர்பாராமல் நம்முடைய வீட்டில் வீசும் போது, ஏதாவது பேய் பிசாசு வருகிறதோ!’ என்று கூட சிலர் பயப்படுவார்கள். அப்படிப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kamatchi-amman5

பொதுவாகவே நல்ல சாம்பிராணி வாசம், நல்ல மல்லிகைப்பூ வாசம் வீசியது என்றால் பேய் நடமாடுகிறது என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் மோகினி பிசாசு வருகிறது என்று கூட சிலர் சொல்லுவார்கள். ஆனால், அது தவறான ஒரு கருத்து. நல்ல மணம் வீசக் கூடிய இடத்தில் கெட்ட சக்தி என்பது நிச்சயமாக வராது. சாம்பிராணி வாசம், மல்லிகைப்பூ வாசம் வீசக்கூடிய இடத்தின் கட்டாயமாக கண்ணுக்கு தெரியாத நல்ல தேவதைகள் தான் வளருவார்கள்.

உங்களுடைய குலதெய்வம் எது, அந்த குலதெய்வத்திற்கு எந்த பொருளை வைத்து வழிபாட்டை மேற்கொள்வார்கள்? எடுத்துக்காட்டிற்கு முருகப்பெருமான் என்றால் விபூதி பிரசாதம் சிறப்பு. அம்மன் கோவில்கள் என்றால் வாசனை நிறைந்த தாழம்பு குங்குமம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சில கோவில்களில் மஞ்சள் பிரதானமாக இருக்கும். சில தெய்வங்களுக்கு சந்தனம் கொண்டு வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

muruga

இப்படி உங்கள் வீட்டினுடைய குலதெய்வத்திற்கு எந்தப் பொருளைக் கொண்டு நீங்கள் வழிபாடு செய்வீர்கள். அந்தப் பொருளின் வாசம் உங்களுடைய வீட்டில் திடீரென்று வீச தொடங்கினால், உங்கள் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும். திடீரென்று நல்ல விபுதி மணம் வீசும். திடீரென்று குங்குமத்தின் மனம் வீசும். திடீரென்று சாம்பிராணி வத்தியின் வாடை வீசத் தொடங்கும். நம்மை அறியாமலேயே நம்முடைய மனது ஏதோ ஒன்றை உணர்வது போல இருக்கும். இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கு இதற்கு முன் நடந்து இருந்தாலும் சரி, இதற்கு பின் நடந்தாலும் சரி உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டை காக்க, உங்கள் வீட்டில் வாழ்கின்றது என்ற அர்த்தத்தைத் தான் குறிக்கின்றது.

vibuthi

காரணமே இல்லாமல் வீட்டில் கெட்ட வாடை வீசுகின்றது. துர்நாற்றம் வீசுகிறது. வீடு இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது என்றால் அந்த வீட்டில் ஏதோ ஒரு கெட்ட சக்தி நடமாட்டம் உள்ளது என்பதுதான் அர்த்தம். அந்த கெட்ட வாடை எதில் இருந்து வருகின்றது என்பதே நமக்கு தெரியாது. ஆனால் நம் வீடு சுத்தபத்தமாக தான் இருக்கும். ஆனால் காற்றில் துர்வாடை வீசிக்கொண்டே இருக்கும்.

kungumam

இப்படிப்பட்ட வாசனை வீசக்கூடிய இடத்தில் நிச்சயமாக தெய்வ சக்தி குடி கொள்ளாது என்பதும் உண்மைதான். ஆக உங்களுடைய வீட்டை துர்நாற்றம் வீசும்படி இருந்தால் உடனடியாக சாம்பிராணி தூபம் போட்டு, வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும். கொஞ்சமாக கோமியம் கொஞ்சம் மஞ்சள் தண்ணீர் இவைகளை மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும். இனி உங்களுடைய வீட்டில் இப்படி தெய்வ கடாட்சம் சேர்ந்த நல்ல நறுமணம் வீசினால் அதைப்பற்றி பயந்து கவலைப்பட வேண்டாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.