உங்கள் பிள்ளைகள் உங்களின் சொற்படி நடக்க இதை செய்யுங்கள்

amman

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பது ஒரு பிரபலமான பழைய திரைப்பட பாடல் வரிகள் ஆகும். இல்லற வாழ்க்கைக்கு அர்த்தத்தை தருவதும், வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிப்பதும் தம்பதிகளுக்கு பிறக்கின்ற குழந்தைகளால் தான். ஒரு கட்டத்தில் அந்த குழந்தைகளேயே பல பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை பெற்றோர்களுக்கு உண்டாகிறது. அதை தவிர்ப்பதற்கான பரிகாரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

family

ஒரு நபரின் ஜாதகத்தில் 9 ஆம் இடம் அவரின் ஒழுக்கம் மற்றும் பெற்றோருக்கு அவர் தரும் மரியாதை மதிப்பு பற்றி கூறும் இடமாக இருக்கிறது. இந்த 9 ஆம் வீட்டிற்குரிய கிரகத்தின் திசை அந்த ஜாதகரின் 6 வயது முதல் 18 வயதுக்குள் வந்தால் அந்த நபர் பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாக மாறிவிடுவர். 18 வயதிற்கு மேற்பட்டு 9 ஆம் வீட்டு கிரகத்திற்குரிய திசை வருமேயானால் அந்த ஜாதகர் ஆண், பெண் யாராக இருந்தாலும் காதல், வீட்டை விட்டு ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்படும்.

மேற்கூறிய ஜாதக அமைப்பை கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகளின் ஜாதகத்தில் 9 ஆம் வீடு கிரக திசை வருகிற காலத்தில் ஜாதகரை அருகிலுள்ள மீனாட்சி, ஆதிபராசக்தி, துர்க்கை அம்மன் ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் அழைத்து சென்று அந்த கோயிலை 27 சுற்றுகள் சுற்றி வரச் செய்து, பின்பு தெய்வத்திற்கு தாமரை மலர் மாலை சூட்டி, அந்த ஜாதகரின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் இது போல் 9 வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால் 9 ஆம் வீட்டு கிரக திசை காலத்தில் உங்கள் பிள்ளைகள் தவறான வழியில் செல்லாமல் உங்கள் சொற்படி நடப்பார்கள்.

durga-devi-amman

மேலே சொல்லப்பட்ட பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள், உங்கள் குழந்தையின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி 9 ஆம் வீட்டிற்குரிய கிரகம் எது என தெரிந்து கொண்டு அந்த கிரகத்திற்குரிய நவதானியத்தை உங்கள் குழந்தை படுத்துறங்கும் தலையணையில் வைத்து தைத்து விட வேண்டும். எட்டு நாட்கள் கழித்து 9 ஆம் நாள் பிள்ளைக்கு அவர் உறங்கிய தலையணையை திருஷ்டி சுற்றி ஆறு, கிணறு போன்றவற்றில் வீசி விட வேண்டும். இந்த இரண்டு பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்வதால் உங்கள் பிள்ளைகள் உங்களின் சொற்படி கேட்டு நடந்து உங்களை மகிழ்விப்பர்.

இதையும் படிக்கலாமே:
சஷ்டியப்தபூர்த்தி செய்யும் முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kulanthaigal nalam pariharam in Tamil. It is also called as Kudumbam sirakka parharam in Tamil or Amman valipadu pariharam in Tamil or Pillaigal nalam pera in Tamil or Kulanthaigal olukkamaga irukka in Tamil.