தினமும் வரக்கூடிய இந்த 1 மணி நேரத்தில், நீங்கள் மண்ணைத் தொட்டால் கூட அது பொன்னாக மாறும். தெருக் கோடியில் இருப்பவரும், பல கோடிக்கு அதிபராகும் சூட்சம ரகசியம்.

cash1

நிறைய பேருக்கு அதிர்ஷ்டக்காற்று என்பது எப்போது வேண்டுமென்றாலும் வீசும். தெருக்கோடியில் இருப்பவர் திடீரென்று பல கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிடுவார். ‘நேற்று வரைக்கும் தெருக் கோடியில் இருந்த நீங்கள், இன்று பல கோடிக்கு அதிபதியான சூட்சம ரகசியம் தான் என்ன என்று அவரைக் கேட்டு பாருங்களேன்!’ அவருக்கே தெரியாது. காரணம் சில நேரங்களில் நாம் செய்யும் ஏதோ ஒரு காரியம், நமக்கான அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்கின்றது. அந்த வரிசையில், அப்படி ஒரு அதிர்ஷ்டம் தரக்கூடிய நேரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

navagragham-1

அந்த அதிர்ஷ்டமான நேரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சிறிய கதையையும் தெரிந்துகொள்வோம். மனிதர்களுக்கு கஷ்டம் வந்தாலும் சரி, தேவர்களுக்கு கஷ்டம் வந்தாலும் சரி, கிரகங்களுக்கு கஷ்டம் வந்தாலும் சரி, எல்லோரும் அந்த ஈசனிடம் தான் போய் முறையிட வேண்டும். இதே போல்தான் ஒரு முறை நவ கிரகங்களுக்கும் கஷ்ட காலம் என்ற ஒன்று வந்தது.

அப்போது நவகிரகங்கள் அனைத்தும் சேர்ந்து, சிவனிடம் சென்று கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று முறையிட்டது. அப்போது சிவபெருமான் ஒரு நிபந்தனையை விதித்தார். சூட்சமமான நிபந்தனை அது. அதாவது சிவபெருமான் நவகிரகங்களிடத்தில் கூறியதாவது! ‘பூலோகத்தில் மனிதர்கள் வாழ்க்கை இயக்குவதே நவக்கிரகங்களாகிய உங்களால் தான்! நவகிரகங்களுடைய இயக்கத்தை ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு சமயத்தில் பூமியில் நிறுத்தி வைக்க வேண்டும்.’ இது நவகிரகங்கள் ஆகிய உங்களால் முடியுமா? இந்த நிபந்தனையை ஏற்று கொண்டால், நவகிரகங்களாகிய உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதாக சிவபெருமான் நவக்கிரகங்களுக்கு வாக்களித்தார்.

sivan

அவ்வளவு எளிதில் நவகிரகங்கள் இந்த நிபந்தனைக்கு ஒற்றுக் கொள்ளவில்லை. எத்தனை மணி நேரம் போராடினாலும் இறுதியில் வெற்றி அந்த எம்பெருமானுக்கு. வேறு வழியில்லாமல் நவகிரகங்கள் தினமும் 1 1/2 மணி நேரம் தங்களுடைய ஆதிக்கத்தை பூமியில் நிறுத்தி வைப்பதாக சிவபெருமானுக்கு வாக்கு கொடுத்தார்கள். அந்த ஒன்றரை மணி நேரம் தான் குளிகை நேரம் என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

‘இந்த குளிகை நேரத்தில் மனிதர்களுக்கு நடக்கக்கூடிய நல்லதையும் கெட்டதையும் நவக்கிரகங்களாகிய நாங்கள் தடுத்து நிறுத்த மாட்டோம்’ என்று நவக்கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து சிவபெருமானுக்கு வாக்குக் கொடுத்து விட்டதாம்! என்று வரலாறு சொல்கிறது. ‌ஆக இந்தக் குளிகை நேரத்தில் நாம் எந்த காரியத்தை செய்தாலும் அந்த காரியம் நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் கிரக கோளாறால் தடைபடுவதற்கு வாய்ப்பே கிடையாது.

sivan

எடுத்த காரியத்தில் தடங்கல் வராமல், அந்த காரியம் பல மடங்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை நாம் இந்த குளிகை நேரத்தில் தொடங்கலாம். நம்முடைய வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் இந்த குளிகை நேரத்தில் வாங்கினால் அது பலமடங்கு அதிகரிக்கும்.

navagragam

இந்த குளிகை நேரத்தில் தங்கம் வாங்கினாலும் நம் வீட்டில் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே இருக்கும். குளிகை நேரத்தில் ஏதாவது ஒரு சொத்தை நாம் வாங்கினாலும் அந்த சொத்து வாங்கிய நேரம், நமக்கு அதன் பின்னால் பல சொத்துக்களை சேர்த்துக் கொண்டே இருக்கும்.

money4

குளிகை நேரத்தில் கடன் மட்டும் வாங்க வேண்டாம். மேலும் மேலும் கடன் பிரச்சனை நம்மை தொடர்ந்து கொண்டே வரும். உங்களுடைய வாழ்க்கையில் எது பல மடங்கு அதிகமாக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த காரியத்தை இந்த குளிகை நேரத்தில் செய்யுங்கள்.

Gold rate in Saravana stores

சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம் எந்த நேரத்தில் இந்த தங்கத்தை வாங்கினேன் என்றே தெரியவில்லை! மேலும் மேலும் தங்கம் வாங்கும் யோகம் எனக்கு வந்து கொண்டே இருக்கின்றது. என்று சொல்லுவார்கள். எதர்ச்சியாக குளிகை நேரத்தில் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய அது நமக்கு பல நன்மைகளை தந்து விடும். ஆனால் அதை நாம் குளிகை நேரத்தில் தான் செய்தோமா, என்று நமக்கே தெரியாது. தினமும் வரக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த இந்த குளிகை நேரத்தை இனி யாரும் தவறவிடாதீர்கள்.