- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅரச இலை குளியல் பரிகாரம்

அரச இலை குளியல் பரிகாரம்

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய சில விஷயங்கள் இருக்கும். அந்த விஷயங்களை பெறுவதற்காக தான் கஷ்டப்பட்டு நாம் அனுதினமும் உழைத்து பாடுபடுகிறோம். அப்படி அந்த விஷயம் கிடைப்பதில் ஏதாவது தடைகள் இருக்கும் பட்சத்தில் அந்த தடைகளை நீக்கி எளிதிலேயே அந்த விஷயங்களை பெறுவதற்கு அரச இலையை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெய்வீக அம்சம் பொருந்தியதாக தான் அரசமரம் திகழ்கிறது. அரச மரம் அனைத்து மரங்களுக்கும் அரசனாக திகழக் கூடியது. இதில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. அரச மரத்தில் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, குரு பகவான் போன்ற தெய்வங்கள் நிறைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரச மரத்தில் இருக்கக்கூடிய இலைகளை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

எந்த பரிகாரம் செய்வதாக இருந்தாலும் எந்த நாளில் பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அரச இலையை வைத்து பரிகாரம் செய்யும் பட்சத்தில் சனிக்கிழமை அன்று மட்டும்தான் அரச இலையை பறிக்க வேண்டும். மற்ற கிழமைகளில் பறிக்கக்கூடாது. இவ்வாறு பறித்த இலையை நாம் ஒரே முறையில் தான் பரிகாரம் செய்யப் போகிறோம். ஆனால் அந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று.

நாலைந்து அரசு இலைகளை பறித்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் இரண்டு இலைகள் ஆவது இருக்கட்டும். இதை நாம் குளிக்கும் தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் நாம் குளிக்க வேண்டும். வேறு எந்த பரிகாரமும் கிடையாது. இப்படி நாம் குளிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பல.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை இந்த முறையில் நாம் குளிப்பதன் மூலம் நமக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் என்று கூறக்கூடிய இந்த மூன்றும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் கிடைக்கும். திங்கட்கிழமை அரச இலை தண்ணீரில் குளிப்பதன் மூலம் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

செவ்வாய்க்கிழமை அரச இலை தண்ணீரில் குளிப்பதன் மூலம் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய விபத்துகள் நேராமல் பாதுகாக்கும். புதன்கிழமை அரச இலை தண்ணீரில் குளிப்பதன் மூலம் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும். வியாழக்கிழமை அரச இலை தண்ணீரில் குளிப்பதன் மூலம் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைத்து கடன் தீரும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அரச இலை தண்ணீரில் குளிப்பதன் மூலம் கௌரவம், மரியாதை, அந்தஸ்து போன்றவை உயர ஆரம்பிக்கும். சனிக்கிழமை அன்று அரச இலை தண்ணீரில் குளிப்பதன் மூலம் சனிபகவானால் ஏற்படக்கூடிய எப்பேற்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தி ஆகும்.

மேல் சொன்ன பலன்களில் எது உங்களுக்கு தேவையோ அந்த கிழமையில் இந்த அரச இலை குளியலை மேற்கொண்டு அந்த பலனை நீங்கள் பெறலாம். விருப்பம் இருப்பவர்கள் தினமும் கூட இந்த முறையில் குளித்து வரலாம்.

இதையும் படிக்கலாமே இழந்ததை திரும்பப் பெற வெற்றிலை பரிகாரம்v

பல அற்புத சக்திகள் கொண்ட அரச இலையை பயன்படுத்தி இப்படி குளிப்பதோடு மட்டுமல்லாமல் இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபட்டால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சற்று முன்