- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெயிலுக்கு குளுகுளுவென, வயிற்றுக்கு குளிர்ச்சியான இந்த நுங்கு பாயாசத்தை ஒருமுறை இவ்வாறு செய்து சாப்பிட்டு பாருங்கள்

வெயிலுக்கு குளுகுளுவென, வயிற்றுக்கு குளிர்ச்சியான இந்த நுங்கு பாயாசத்தை ஒருமுறை இவ்வாறு செய்து சாப்பிட்டு பாருங்கள்

- Advertisement -

வெயில் காலம் துவங்கி விட்டாலே அனைவருக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கே வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாது. அதிலும் வெளியில் சென்று வேலை பார்த்து வருபவர்களுக்கு மிகவும் முடியாமல் போய்விடும். பலரும் வயிற்றுவலி அஜீரண பிரச்சனையின் காரணமாக அவதிப்படுவார்கள். சாப்பிட எதுவும் விரைவாக ஜீரணம் ஆகாது. நெஞ்சு எரிச்சல் அதிகரித்து விடும். அவ்வாறு அடி வயிறு வலி, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளும் வந்து விடும். இது போன்ற உடல் சூட்டை தணிப்பதற்கு இயற்கையாக கிடைக்கும் சில உணவுப் பொருட்களை வைத்து வீட்டிலேயே ருசியான உணவுகளை சமைத்து சாப்பிட முடியும். அவ்வாறு நுங்கு வைத்து செய்யக்கூடிய இந்த இனிப்பு பாயாசத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
நுங்கு – 15, பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 300 கிராம், பாதாம் பிசின் – 3 துண்டு, ஏலக்காய் – 5.

- Advertisement -

செய்முறை:
முதல் நாள் இரவே 3 துண்டு பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 3 அல்லது 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஊறி ஜெல்லி போன்று உப்பி வந்திருக்கும். பின்னர் 15 நுங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மேல் உள்ள தோல் அனைத்தையும் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும்.

பின்னர் அனைத்து நுங்கில் இருக்கும் தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று நுங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மற்ற நுங்குகளை மிக்ஸி ஜாரில் சேர்ந்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனியாக எடுத்து வைத்த மூன்று நுங்குகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். அதில் ஒரு லிட்டர் பால் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு= கொதிக்க விடவேண்டும். பால் சிறிது நேரத்தில் நன்றாக சுண்டி வர ஆரம்பிக்கும். அப்பொழுது அரைத்து வைத்துள்ள நுங்கு விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் 5 ஏலக்காயை தட்டி சேர்த்து கலந்து விட வேண்டும். இவ்வாறு கலந்து விட்ட பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் இவற்றுடன் 300 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, இந்த பாயசத்தை நன்றாக ஆற வைக்க வேண்டும். பிறகு இவற்றுடன் எடுத்து வைத்துள்ள நுங்கு தண்ணீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவை ஆறியதும் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் அனைவருக்கும் பரிமாறி கொடுத்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். வயிற்றுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் உடல் சூடும் தணியும்.

சற்று முன்