குடும்ப நிம்மதிக்காகவும், தம்பதி ஒற்றுமைக்காகவும் பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ளும் பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

kungumam-parvathi
- Advertisement -

பொதுவாக பெண்களுடைய ஆதிக்கத்தில் குடும்பம் நடந்தால் அந்த குடும்பம் சிறப்பானதொரு வழியில் செல்லும். எங்கும் எதிலும் ஆணாதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு கண்டிப்பாக நிம்மதி என்பதே இருக்காது. ஒரு பெண் அனைவரையும் அரவணைத்து செல்லும் மகாலட்சுமியாகவும், பிரச்சனை என்றால் எவரையும் எதிர்க்கும் பராசக்தி ஆகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்களை மதித்து போற்றும் ஆண்கள் எப்பொழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகைய பெண்கள் குடும்ப நலனுக்காகவும், தம்பதி ஒற்றுமைக்காகவும் தினந்தோறும் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்வது அவசியமாகும். அப்படி பெண்கள் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொழுது செய்ய வேண்டிய விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

hand

குடும்ப பொறுப்புகளை சுமந்து வழிநடத்தும் பெண்கள் எப்பொழுதும் அதிகாலையில் எழுவது மிகவும் நன்மைகளை கொடுக்கக் கூடியது ஆகும். அதிகாலையில் எழுபவர்களுக்கு வாழ்வில் தோல்வி என்பதே இருப்பதில்லையாம். அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் என்பதும் குறைவாகத் தான் இருக்கும். எழுந்ததும் முதல் வேலையாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் அல்லது உங்கள் உள்ளங்கையை பார்த்து கண் விழிக்க வேண்டும்.

- Advertisement -

உள்ளங்கையை பார்த்து கண்விழித்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். இப்படி அதிகாலையில் எழுந்து நீங்கள் குளிக்கா விட்டாலும் பரவாயில்லை. குளித்தால் இன்னும் கூடுதல் பலன் உண்டாகும். கிழக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும். எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் அமரலாம். பூஜை அறை, வரவேற்பறை என்று எங்கு வேண்டுமானாலும் கிழக்கு பார்த்து அமர்ந்து கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை ஆத்மார்த்தமாக மனதிற்குள் 9 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு எழுந்து கதவைத் திறந்து வாசல் தெளித்து கோலம் போடலாம்.

sivan-parvathi

மந்திரம்:
ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ!!

- Advertisement -

பின்னர் குளித்து முடித்து சுத்தபத்தமாக நீங்கள் ஆனதும் தலைக்கு எண்ணெய் தடவி நேர் வகிடு எடுத்து நன்கு இறுக்கமாக முடியை கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமம் சுத்தமானதாக இருக்க வேண்டும். சாதாரண குங்குமம் எப்பொழுதும் ஒருவித அலர்ஜியை உண்டாக்கும் எனவே தாழம்பூ குங்குமம், மதுரை மீனாட்சி அம்மன் குங்குமம் போன்ற பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த குங்குமத்தை வாங்கி வைத்துக் கொள்வது சிறப்பு. அந்த குங்குமத்தை உங்கள் வலது கை மோதிர விரலால் எடுத்து கிழக்கு முகமாக நின்று குடும்ப ஒற்றுமைக்கும், தம்பதி ஒற்றுமைக்கும் மனதார வேண்டிக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இட்டுக் கொள்ள வேண்டும்.

kungumam

மந்திரம்:
ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காம தேவாய நமஹ!!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நிச்சயம் நீங்கிவிடும். குறிப்பாக தம்பதியர்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகள், மனக்கசப்புகள் எல்லாம் அகன்று அன்னோன்யம் மேலோங்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். திருமண பந்தத்தை அதன் அர்த்தம் உணர்ந்து முழு மனதோடு இருவரும் ஏற்றுக் கொண்டால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். இதற்கான ஒரு சிறிய முயற்சி தான் இந்த ஆன்மீக குறிப்பு. விருப்பப்பட்டவர்கள் முயற்சி செய்து பயனடையலாமே!

- Advertisement -