நாம் எல்லோருக்கும் தெரியும். இப்போது ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. இது வாராஹிக்கு உரிய நவராத்திரி. இதோடு சேர்ந்து வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாளை திரும்பவும் நாம் எப்போது வரவேற்போம் என்று யாருக்குமே தெரியாது. ஆகவே தீராத கஷ்டங்கள் தீர இந்த நாளை கட்டாயம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரபஞ்ச சக்தி முழுவதும் வாராஹிதாய் இப்போது நிறைந்திருக்கின்றாள். மனம் உருகி எந்த வரத்தை கேட்டாலும் அவள் கொடுக்கத் தயார். நீங்கள் குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு.
குழந்தை வரம் தரும் வாராகி வழிபாடு
உங்கள் வீட்டு பூஜை அறையில் வாராகியின் திருவுருவப்படம் சிலை இருந்தாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இல்லை என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. இன்று 10-07-2024 மாலை பூஜை செய்வதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு முறை குளித்து விடுங்கள்.
பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து, வாரகியின் சிலை படம் வைத்திருப்பவர்களுக்கு என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது தெரியும். அந்த சிலைக்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து அலங்காரம் செஞ்சுக்கோங்க. திரு உருவப்படமாக இருந்தால் துடைத்து பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சாதாரணமாக உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய விளக்கை ஏற்றி விடவும்.
வராகிக்கு செம்பருத்தி இலை ரொம்ப ரொம்ப உகந்தது. 5 செம்பருத்தி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். கிழியாத இலையாக இருக்கட்டும். கொஞ்சம் பெரிய இலையாக இருக்கட்டும். அந்த இலையின் மேல் சாதாரணமாக எழுதக்கூடிய நீல நிற பேனாவை கொண்டு ‘குழந்தை வரம் தேவை’ என்று எழுதுங்கள். இந்த ஐந்து இலைகளையும் வாராகியின் முன்பாக வைத்து விடுங்கள்.
வாராஹி படம் இல்லை என்றால் ஏதாவது ஒரு அம்பாள் படத்திற்கு கீழே இந்த இலையை வைக்கலாம். இரண்டு பாலாடை வாங்கிக்கோங்க சங்கடை என்று சொல்லுவாங்க. புது பாலாடையை வாங்கி நன்றாக சுத்தம் செய்துவிட்டு துடைத்துவிட்டு அந்த பாலாடைக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வாராகி தாயின் முன்பு வைத்து விடுங்கள்.
இந்த செம்பருத்தி இலைகள் மேலே வைத்தால் கூட தவறு கிடையாது. மனம் உருகி வாராகியிடம் வேண்டுங்கள். அடுத்த பத்தாவது மாதம் எங்கள் வீட்டில் குழந்தை வரணும். அந்த குழந்தைக்கு இந்த பாலாடையை நாங்கள் புழங்கனும். அதற்கு நீதான் பொறுப்பு என்று வாராகியின் மீது பாரத்தை போட்டுவிட்டு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
முடிந்தால் உங்கள் கணவர் இந்த வழிபாட்டிற்கு ஒத்துழைப்பார் என்றால் இருவரும் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் எண்ணி பத்தாவது மாதத்தில் உங்கள் வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. வாராஹி அன்னை எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பதற்கு தயாராக உள்ளார்.
அவளை முழுமையாக நாம்தான் சரணடைவது கிடையாது. இந்த நாளை தவிர விடாதிங்க கட்டாயம் மேல் சொன்ன வழிபாட்டு முறையை செய்யுங்கள். உங்களுக்கான வரம் வீடு தேடி வரும். நீங்கள் குழந்தைக்காக மருத்துவரை அணுகிக் கொண்டிருந்தாலும் மருத்துவத்தை நிறுத்தக்கூடாது. மருத்துவத்தோடு சேர்ந்து இந்த ஆன்மீக வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் மருத்துவம் சக்ஸஸ் ஆகி குழந்தை கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர வாராஹி வழிபாடு
நம்ப முடியாத பல அற்புதங்களை வாராகித்தாய் தங்களுடைய பக்தர்களுக்கு நிகழ்த்தியுள்ளார். அந்த வரிசையில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.