இதை மட்டும் நீங்கள் வீட்டில் செய்தால் நிச்சயம் செல்வம் சேரும்

laksmi

முற்றும் துறந்த முனிவர்களுக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை. ஆனால் இல்லற வாழ்க்கையில் இருக்கும் சாமானிய மக்களுக்கு தேவைகள் இருந்த வண்ணமே இருக்கும். அத்தகைய மக்கள் அவர்கள் விரும்பியதை பெறுவதற்கான பூஜை வழிபாட்டு முறைகளை முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அப்படியான பூஜை வழிபாட்டு முறைகளில் ஒன்று தான் பழ வர்க்க அர்ச்சனை வழிபாடு. இந்த வழிபாடு செய்யும் முறையும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mahalakshmi

நாம் பழங்கள் சாப்பிடும் போது பழங்களின் சுவை நமக்கு பரவசத்தையும், மன அமைதியையும் தருகின்றன. இதன் காரணமாகத் தான் பழங்களை தெய்வத்திற்கு நைவேத்தியமாக வைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மாதுளம் பழம் செல்வ மகளான லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அந்த மாதுளம் பழங்களை கொண்டு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபடும் ஒரு முறை தான் பழ வர்க்க அர்ச்சனை முறை.

திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமையில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள்ளாக இந்த பழ வர்க்க அர்ச்சனை பூஜையை செய்து விட வேண்டும். சுத்தமான சில மாதுளம் பழங்களை எடுத்துக் கொண்டு அதை உரித்து, மாதுளை பழங்களின் மணிகளை ஒரு தூய்மையான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு 27 அல்லது 108 சுத்தம் செய்யப்பட்ட சில்லரை நாணயங்களை அந்த மாதுளம் பழ மணிகள் இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

madhulai 2

ஒரு தாம்பாளத் தட்டில் லட்சுமி தேவியின் சிறிய சிலை அல்லது படத்தை வைத்து, வாசமுள்ள மலர்கள் கொண்டு லட்சுமி தேவிக்கு அலங்காரம் செய்ய வேண்டும். பின்பு பூஜை அறையில் இருக்கும் சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படத்திற்கு தீபமேற்றி, அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்கிய பிறகு, பாத்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு சில்லரை நாணயங்களுடன் சிறிது மாதுளம் பழ மணிகளை சேர்த்து, லட்சுமி தேவியின் சிலை அல்லது படத்திற்கு சலட்சுமி மந்திரங்களை துதித்தவாறு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

லட்சுமி தேவிக்கு இந்த மாதுளம் பழ வர்க்க அர்ச்சனை செய்து முடித்த பிறகு, அந்த மாதுளம் பழங்களை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பிரசாதமாக தர வேண்டும். இந்தப் பழ வர்க்க அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். உங்கள் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு ஏற்படும். மேற்கண்ட பழ வர்க்க அர்ச்சனை வழிபாட்டை வாழ்நாள் முழுவதும் செய்து வருபவர்களுக்கு வறுமை நிலை என்றும் அணுகாது.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட சக்திகள் தொந்தரவு நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi archanai poojai in Tamil. It is also called as Lakshmi valipadu in Tamil or Lakshmi devi pooja in Tamil or Lakshmi kadatcham peruga in Tamil or Kudumbathil prachanai theera in Tamil.