நாளை, நீங்கள் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையில் இந்த 2 பொருள் இல்லை என்றால் அந்த பூஜைக்கு பலன் இல்லை. பூஜையும் நிறைவடையாது.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நம்மில் பலபேரது வீட்டில் நாளை கட்டாயம் லட்சுமி குபேரரது பூஜை இருக்கும். இந்த பூஜையை முறைப்படி, அவரவர் வீட்டு வழக்கப்படி எப்படி செய்வது என்று வரைமுறை இருக்கும். அதன்படி செய்யலாம். பழக்கம் இல்லாதவர்கள் கூட, இந்த வருட தீபாவளிக்கு லட்சுமி தேவியையும், குபேரரையும் மனதார நினைத்து உங்களுடைய வீட்டில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, உங்களால் முடிந்த நிவேதனத்தை மகாலட்சுமிக்கும் குபேருருக்கும் படைத்து, மனதார வேண்டிக் கொண்டாலும் போதும். அந்த லட்சுமி குபேர பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. உண்மையான பக்தியும், நம்பிக்கையான வேண்டுதலும், இந்த இரண்டும் இருந்தாலே நம் பூஜைக்கு பலன் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை.

guberan

இதுதவிர, சாஸ்திரப்படி சில பொருட்களுக்கு, அதற்குரிய தெய்வங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் தன்மை இருக்கும். அதை வைத்து பூஜை செய்தால் நல்லது என்று கூறுகின்றது சாஸ்திரம். அந்த அடிப்படையில் எந்த 2 பொருட்களை நம் வீட்டு பூஜை அறையில் நாளை வைத்து வழிபாடு செய்தால் நல்லது என்பதையும் இந்த திருநாளில் தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

வெற்றியைத் தரும் வெட்டிவேர் முதலாவது. இரண்டாவது, குபேரருக்கு மிகவும் பிடித்தமான பச்சை குங்குமம். இந்த இரண்டு பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். நாளை பூஜையில் வைத்த இந்த பச்சை குங்குமத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொண்டால், குபேரனின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். வரப்போகின்ற வருடம் முழுவதும்.

vettiver

வெட்டிவேரை சிறிதளவு மஞ்சள் துணியில் முடிந்து மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து, பூஜை செய்து அந்த வெட்டிவேர் முடிச்சை பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த திருநாளில் மகாலட்சுமியின் பாதத்தில் இருந்து எடுத்து வைக்கக்கூடிய வெட்டி வேருக்கு பலன், பல மடங்காக பெருகும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பஞ்ச பாத்திரத்தில் சிறிதளவு வெட்டிவேரை, தீபாவளி அன்று காலையிலேயே போட்டு விடுங்கள். மாலை அந்த தீர்த்தத்தை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடலாம். இப்படி செய்யும் போது வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், சுத்தமாக நீங்கி விடும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

pachai-gumkum

இந்த தீபாவளி திருநாளில் உங்களுடைய வீட்டில் இருக்கும் இருள் நீங்க, தீப ஒளி பிரகாசமாக ஒளிர, இந்த தீர்த்தத்தை நீங்களும் உங்கள் வீட்டில் தெளித்து பாருங்கள். நிச்சயம் வித்தியாசத்தை உணரமுடியும். உங்களுக்கு இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால், தாராளமாக பழக்கமுள்ளவர்கள், பழக்கம் இல்லாதவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பூஜையை அவரவர் வீட்டில் செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -