வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு மண் பானை கலசம் இருந்தால் போதும் மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்

lakshmi
- Advertisement -

எப்பொழுதும் ஒருவருடைய வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்து செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்டால் தெய்வத்தை நாம் நினைப்பதையே மறந்து விடுவோம். எனவே தினமும் எவரொருவர் தெய்வத்தை நினைத்து பூஜைகள் செய்து வருகின்றாரோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் முழுவதுமாக நிறைந்திருக்கும். இவ்வாறு தினமும் பூஜை செய்ய முடியாதவர்கள் இந்த மண் பானை கலசத்தினை உங்கள் பூஜை அறையில் வைத்து வாரம் ஒருமுறை பூஜை செய்து வந்தாலே போதும். லட்சுமிதேவி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள். இந்த கலச பூஜையினை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

மகாலட்சுமி:
எந்த வீட்டில் மகாலட்சுமி தேவி நித்ய வாசம் செய்கின்றாளோ அவர்களது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அதேபோல் பணத்திற்கான வரவும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். எனவே மகாலட்சுமி தேவியை வீட்டிற்கு வரவழைத்து நித்திய வாசம் செய்ய அருள்புரியும் இந்த மண் பானை கலசத்தினை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்.

- Advertisement -

மண் பானை கலசம் வைக்க தேவையான பொருட்கள்:
சிறிய மண்பானை – 1, சர்க்கரை – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், நவதானியம் – 2 ஸ்பூன், பருப்பு – அரை ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, வலம்புரி சங்கு – 1, ஐம்பொன் – சிறிய துண்டு, வெற்றிலை – 3, பாக்கு – 2, புனுகு – 1, ஜவ்வாது – 1.
இவை அனைத்தையும் வியாழக்கிழமை தினத்தன்றே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கலசம் வைக்கும் முறை:
முதலில் மண்பானையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு, பானை முழுவதும் திருநீர் பூசிக்கொள்ள வேண்டும். பின்னர் சந்தனம் மற்றும் குங்குமம் கொண்டு திலகமிட வேண்டும். அதன் பின் பூஜை அறையின் முன் அமர்ந்து மண்பானையினை கையில் வைத்துக் கொண்டு, அதனுள் நவதானியம், சர்க்கரை, உப்பு, பருப்பு, புளி, வலம்புரி சங்கு, ஐம்பொன், வெற்றிலைப்பாக்கு, சிறிதளவு ஜவ்வாது மற்றும் சிறிதளவு புனுகு இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின் அந்த பானையை பூஜை அறையில் வைத்து விட்டு மகாலட்சுமி தேவியை மனதில் நினைத்து “ஓம் தன தான்ய லட்சுமியே வசி வசி வசிய நமஹ” என்று 108 முறை சொல்லி, மண்பானை கலசத்திற்கு தீப தூப ஆராதனை காண்பித்து வணங்கிட வேண்டும். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தோறும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்திட வேண்டும். இதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் செய்து வர வேண்டும்.

vijaya-lakshmi

மண்பானையில் இருக்கும் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களை நீங்கள் சமைக்கும் பொழுது அவற்றையும் சேர்த்து சமைத்திடலாம். வெற்றிலை பாக்கு, ஜவ்வாது, புனுகு இவற்றை ஏதேனும் ஒரு செடியில் கொட்டிவிடலாம். வலம்புரி சங்கு மற்றும் ஐம்பொன் இவற்றை அப்படியே வாரம்தோறும் நீங்கள் பூஜை செய்யும்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

poojai

இவ்வாறு வெள்ளிக்கிழமை தோறும் இந்த கலச பூஜையினை செய்வதன் மூலம் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக நமது வீட்டில் தங்கி விடுவாள். எனவே உங்கள் வீட்டில் எந்த ஒரு செல்வத்திற்கும் குறை இல்லாமல் வளமுடன் வாழ வழி கிடைக்கும்.

- Advertisement -