உங்களுக்கு வற்றாத பண வரவு உண்டாகச் செய்யும் சக்தி வாய்ந்த மந்திரம்

lakshmi

முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். எவ்வளவு பெரிய பணக்காரனானாலும் சரி பரம ஏழை ஆனாலும் சரி அனைவரது எண்ணமும் தனது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. எனினும் ஒரு வழியில் தேவையான அளவு பணம் ஈட்டினாலும் மற்றொரு வழியில் அந்த பணத்தில் பெரும்பாலானவை செலவாகிவிடுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கான லட்சுமி குபேர பீஜ மந்திரம்.

lakshmi kubera

லட்சுமி குபேர பீஜ மந்திரம்

இம் ஷ்ரீம் க்ரீம் ஓம் குபேர் லக்ஷ்மி கம்லா
தேவ்னாயே தன் கர்ஷின்யே ஸ்வாஹா

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், பூஜையறையில் லட்சுமி மற்றும் குபேரன் படத்திற்கு வாசமுள்ள மலர்களை சமர்ப்பித்து, வடக்கு திசையை பார்த்தவாறு நின்று, இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் மகாலட்சுமி மற்றும் குபேரனின் கடாட்சம் கிடைக்க பெற்று செல்வ சேர்க்கை அதிகரிக்கும். தினசரி மற்றும் மாத வருமானம் பெருகும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது. வற்றாத பண வரவு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கத் தொடங்கும். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகளின் பெருக்கம் உண்டாகும்.

kuberan

லட்சுமி குபேர வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

நம் வாழ்வில் பணத்தின் தேவை தினந்தோறும் இருக்கிறது. எனவே லட்சுமி மற்றும் குபேர பகவானை தினமும் அவர்களுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடலாம். அப்படி தினந்தோறும் லட்சுமி குபேரனை வழிபட முடியாதவர்கள் வாரங்களின் இறுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டும் லட்சுமி மற்றும் குபேரனின் சிறிய அளவு படத்திற்கு பழம் மற்றும் இனிப்பு நைவேத்தியம் செய்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி லட்சுமி குபேர பீஜ மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் நன்மைகள் ஏற்படும். லட்சுமி மற்றும் குபேரனின் அருளை முழுமையாகப் பெற நினைப்பவர்கள் ஒரு போதும் தங்களின் செல்வ வசதிகளை குறித்து கர்வம் கொள்ளக்கூடாது. மேலும் நம் மனதில் பேராசை, சுயநலம் போன்ற எண்ணங்கள் நிறைந்து இத்தகைய லட்சுமி குபேர பூஜை செய்வதால், லட்சுமி தேவி மற்றும் குபேரன் அருள் கிடைக்காமல் போய்விடும் நிலையும் ஏற்படும்.

lakshmi

லட்சுமி குபேர வழிபாடு பயன்கள்

வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய தேவையான பணம் அல்லது செல்வத்தின் அம்சமாக லட்சுமி தேவியும், அனைத்து விதமான செல்வங்களுக்கு அதிபதியாக குபேர மூர்த்தியும் இருக்கிறார்கள். எனவே அவர்களின் அருள் நமக்கு பூரணமாக கிடைப்பதால் செல்வ வசதிகள் பெருகி மகிழ்வான வாழ்க்கை வாழலாம். பிறரிடம் கடன் வாங்கி வாழும் நிலை ஏற்படாமல் தடுக்கும். வாங்கிய கடனையும் விரைவில் திருப்பி செலுத்தக்கூடிய அமைப்பு உண்டாகும். வீண் பண விரயங்கள் ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களை பீடித்திருக்கும் எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi kubera beeja mantra in tamil. It is also called as Lakshmi mantras in Tamil or Kubera mantras in Tamil or Beeja mantras in Tamil or Veetil selvam adhigarika in Tamil.