ஸ்ரீ லலிதாம்பிகை மந்திரம்

lalithambikai-compressed

எந்த ஒரு மனிதனும் உழைத்தால் மட்டுமே செல்வம் ஈட்ட முடியும். பொருளீட்ட பலரும் பணியாளர்களாக வேலைக்கு சேர்ந்து பணிபுரிகின்றனர். பலர் தங்களுக்கு மிகவும் விருப்பமான தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு பொருளீட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தொழில், வியாபாரங்களில் ஏற்படும் முடக்க நிலை நீங்கவும், புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகவும் துதிக்க வேண்டிய “ஸ்ரீ லலிதாம்பிகை மந்திரம்” இதோ.

Amman

லலிதாம்பிகை மந்திரம்

ஓம் லலிதாம்பிகாய் நமஹ

பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி திதிகளில் அருகில் இருக்கும் அம்பிகை கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை 108 அல்லது 1008 உரு ஜெபிப்பதால் உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் படிப்படியாக நீங்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.

Amman silai

சிவனின் சரிபாதியான பார்வதி தேவிக்கு பல்லாயிர பெயர்கள் உண்டு. அதில் ஒன்று தான் லலிதா, லலிதாம்பிகை போன்றவையாகும். லலிதம் என்பதற்கு அழகானது, இறைவனின் பரிசு என்பன போன்ற பல அர்த்தங்கள் உண்டு. லலிதாம்பிகையாக இருக்கும் அம்மனை போற்றும் சிறந்த ஸ்தோத்திரமாக ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் இருக்கிறது. இந்த ஸ்தோத்திரத்தை துதித்து வருபவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். அதை துதிக்க முடியாதவர்கள் மேலே உள்ள எளிய லலிதாம்பிகை மந்திரத்தை துதித்தாலும் சிறந்த பலன்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்க்கையை வளமாகும் தீபலட்சுமி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lalithambigai mantra in Tamil.