பழைய சாதம் இருந்தா யோசிக்காமல் சட்டுனு நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியான இந்த ஸ்நாக்ஸ் பண்ணி குடுங்க. இது மீந்த சாதத்தில் செஞ்சேன்னு நீங்களே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

left over rice pakoda
- Advertisement -

சாதம் மீந்து போனால் அதை என்ன செய்வது என்ற கவலை இன்று எல்லா வீட்டு இல்லத்தரசிகளுக்கும் இருக்கக் கூடியது தான். ஏனென்றால் இப்பொழுதெல்லாம் மீந்த சாதத்தை அடுத்த வேளைக்கு யாரும் சாப்பிடுவது கிடையாது. பழைய சாதத்தை சாப்பிடும் வழக்கமும் மறைந்து விட்டது. இனி சாதம் மீந்து விட்டால் கவலைப்படாமல் இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து விடுங்கள். மீந்த சாதத்தில் செய்தது என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு சுவையாக சூப்பராக இருக்கும்.

செய்முறை

இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு கப் மீந்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பக்கோடா செய்ய சாதம் கொஞ்சம் குழைவாக இருந்தால் இன்னுமே நன்றாக இருக்கும். ஒரு வேளை உங்களிடம் சாதம் குழைவாக இல்லை என்றால் இந்த ரெசிபி செய்வதற்கு முன்பாகவே சாதத்தை கொஞ்சம் கைகளாலோ அல்லது மத்து வைத்தோ மசித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த சாதத்தில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு முக்கால் கப் கடலை மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு கடலை மாவிற்கு பதிலாக பொட்டுக்கடலை பவுடர் செய்து அந்த மாவையும் சேர்க்கலாம். சுவை இன்னும் சூப்பராக இருக்கும்.

இத்துடன் ஒரு பச்சை மிளகாயை அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள் அதே போல் ஒரு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கொஞ்சம் கருவேப்பிலை, கொத்த மல்லி, ஒரு துண்டு இஞ்சி அனைத்தும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்த பின் அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து கைகளாலே நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்க கூடாது. கைகளால் தான் மசித்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பக்கோடாவை போட்டு பொரிப்பது போல பொரித்து எடுத்து விடுங்கள். இதில் அதிக நேரம் வேக வைக்க வேண்டிய பொருள்கள் எதுவும் இல்லை எனவே போட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் நல்ல மொறு மொறு என்று வெந்து கிறிஸ்ப்பியாக தயாராகி விடும்.

இதையும் படிக்காலமே: வெறும் அரிசி மாவு இருந்தா போதும் கேரள ஸ்டைலில் சுவையான ரைஸ் பத்திரி செய்து விடலாம். ரொம்பவே டேஸ்ட்டான இந்த ரெசிபியை எப்படி மிஸ் பண்ணுணோம்ன்னு கண்டிப்பா ஃபீல் பண்ணுவீங்க.

அவ்வளவு தாங்க மீந்த சாதத்தில் சுவையான ஸ்நாக்ஸ் தயார். இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம் அல்லது டீ டைம் ஸ்நாக்ஸ் ஆகவும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இதை சாதத்திற்கு சைடு டிஷ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம். இனி சாதம் மீந்து விட்டால் கவலைப்படாமல் இந்த டிஷ் செஞ்சு அசத்துங்க.

- Advertisement -