சப்பாத்தி மீந்து போனால் இனி தூக்கி போடாதீங்க! இப்படி ஈஸியா பிஸ்கட் செஞ்சு வச்சிடுங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டியான சப்பாத்தி பிஸ்கட் எப்படி செய்வது!

- Advertisement -

பொதுவாக சப்பாத்தி சுடும் பொழுது சில சமயங்களில் மீந்து போய் விடுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இப்படி மீந்து போன சப்பாத்தி காய்ந்து விடும் என்பதால் அதை பெரும்பாலும் பயன்படுத்தாமல் தூக்கி எறிந்து விடுவார்கள். அதற்கு பதிலாக மீந்து போன சப்பாத்தியில் இப்படி சுவையான டேஸ்டியான பிஸ்கட்டை எப்படி ஈசியாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சப்பாத்தி பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – நான்கு, பால் – ஒன்றரை கப், சர்க்கரை – கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய் – அரை ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

சப்பாத்தி பிஸ்கட் செய்முறை விளக்கம்:
முதலில் உங்களிடம் இருக்கும் மீந்து போன சப்பாத்திகளில் நான்கு சப்பாத்திகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது ஓரளவுக்கு தான் அரைபடும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் நான்கு சப்பாத்திக்கு ஒன்றரை கப் அளவிற்கு பால் சேர்க்க வேண்டும். நீங்கள் எடுத்திருக்கும் சப்பாத்திகளின் அளவுக்கு ஏற்ப பார்த்து பாலை கூடவோ, குறையவோ சேர்த்துக் கொள்வது நல்லது. பால் கொதிக்க ஆரம்பித்ததும் கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நன்கு கரைய வேண்டும். சர்க்கரை கரைந்த பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள சப்பாத்தி பவுடரை சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். பேனில் ஒட்டாமல் நன்கு பால் முழுவதும் உறிந்து கொண்டு திரண்டு வர வேண்டும்.

- Advertisement -

திரண்டு வரும் போது கால் கப் அளவிற்கு தேங்காய் சேர்த்து ரெண்டு நிமிடம் நன்கு கிண்டி விடுங்கள். அடுப்பில் ஒட்டிக் கொள்ளக் கூடாது. அந்த அளவிற்கு நன்கு திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விட்டு விடுங்கள். கை பொறுக்கும் அளவிற்கு நன்கு ஆறியதும் ஏலக்காய் தூள், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.

இது ஒரு கெட்டியான மாவு பதத்திற்கு இப்பொழுது உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பிஸ்கட் போல தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் காத்திருங்கள். ஒருபுறம் நன்கு வந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் எண்ணெய் வடிய எடுத்து வைத்து விடுங்கள். ஆறியதும் ஸ்டோர் செய்து வைக்கலாம். இது கிரிஸ்பியான பிஸ்கட் போல சூப்பராக இருக்கும். இதை குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள், விரும்பி சாப்பிடுவாங்க. பெரியவர்களும் ரசித்து சாப்பிடக்கூடிய இந்த கோதுமை பிஸ்கட் மூன்று நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது.

- Advertisement -