குலதெய்வத்தை உங்கள் வீட்டிலேயே தங்க வைக்க ரகசிய வழி.

agal-cash

எவ்வளவு பெரிய பூஜை புனஸ்காரங்களை நம் வீடுகளில் செய்து வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தினால் வருமானத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். இதற்காக நாம் ஜாதகம் பார்த்து கூட பல பரிகாரங்களை பெரிய அளவில் பணம் செலவழித்து செய்து இருப்போம். ஆனால் பலன் இருந்திருக்காது. எதனால் நம் வீட்டில் மகாலட்சுமியானவள் தங்கவில்லை என்ற குழப்பம் சிலருக்கு இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. உங்களது வீட்டில் மகாலட்சுமி தங்காமல் இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது சாஸ்திரம். அப்படி உங்கள் வீட்டில் இருக்கும் அந்தக் குறை என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் அந்தக் குறை இருந்தால் அதற்கான பரிகாரத்தையும் இந்த பதிவின் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

mahalakshmi

நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள். அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோம்.

மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

vilakku

இலுப்பை எண்ணைக்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

- Advertisement -

vilakku

நம் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.

இதையும் படிக்கலாமே
கோவிலில் ஜடாரியை தலையில் வைத்து எடுப்பதன் அர்த்தம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Selvam peruga pariharam Tamil. Selvam peruga poojai Tamil. Selvam thanga Tamil. Selvam sera valikku in Tamil.