உங்கள் பிறப்பினால் ஏற்படும் துக்கத்தை போக்க இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து வரலாம்! எல்லா கஷ்டங்களும் நீங்கி விரைவில் உங்கள் நிலைமை மாறமாம்.

lingam-athi-sankarar
- Advertisement -

மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் நிலை கர்ம வினைப் பயன்களை நாம் அனுபவிப்பதற்கு தான். பிறவியில்லா நிலை முக்தி நிலையாக கருதப்படுகிறது. இந்நிலையை அடையாமல் மனிதனாகப் பிறப்பெடுத்தால் எவ்வளவோ இன்ப, துன்பங்களை வாழ்வில் சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி நாம் அனுபவிக்கும் தீராத துக்கங்களை போக்க இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வரலாம். அது என்ன ஸ்லோகம்? அதன் மகிமை என்ன? அதைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

aathisankarar

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இருக்கும் சவால்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி நம் முன் இருக்கும் சவால்களை எதிர் கொள்ளும் தைரியம் பிறக்க இறைவனின் அருளாசி வேண்டும். சிவபெருமான் கருணையே வடிவானவர். கேட்ட வரங்களை நல்லவன் என்றும் பாராமல், அசுரன் என்று நினையாமல் வாரி வழங்கக் கூடியவர். ஈசனின் அருள் ஒன்று நமக்கு கிட்டினால் எத்தகைய துயர்களையும் தகர்த்து எறியலாம். எத்தனை பேர் நம் முன்னால் பகையாக நின்றாலும் அத்தனை பேரையும் எதிர்த்துப் போராடலாம். வாழ்க்கையில் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் சவால்களையும், கஷ்ட நஷ்டங்களையும் திடமாக எதிர் கொள்ள கீழ்வரும் இந்த லிங்காஷ்டகத்தை தினமும் உச்சரியுங்கள்.

- Advertisement -

லிங்காஷ்டக ஸ்லோகங்கள்:
1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

lingam-vilva-archanai

2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

- Advertisement -

3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

jambukeswara-lingam

4. கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

- Advertisement -

5. குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

runavimosana-lingam

6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

sunai lingam

8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

Snake with lingam

ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம் மிகவும் சக்தி வாய்ந்த பாடலாக கருதப்படுகிறது. இப்பாடலை தினமும் பாடி வந்தால் இறப்பின் போது சிவலோகத்தில் மோட்சத்தை அடையலாம் என்று கூறுகிறார். இப்பாடல் மகாவிஷ்ணு, நான்முக பிரம்மன் மற்றும் அத்துணை தேவர்களும் அர்ச்சித்து வழிபட்ட லிங்கமாக பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் எனவே இதில் இருக்கும் 8 லோகங்களையும் இடைவிடாமல் தினமும் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் விரைவாக தீருமாம். மேலும் தீர பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் தீரவும் இப்படி தினமும் உச்சரித்து பயன் பெறலாம்.

- Advertisement -