வெறும் 10 நிமிஷத்துல உங்களுடைய கருமையான உதடுகளை, பிங்க் ரோஜா இதழ் மாதிரி மாற்ற இதைவிட பெஸ்ட் டிப்ஸ் வேற எதுவுமே இருக்க முடியாது.

lip

நம்முடைய முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். தவிர நம்முடைய உதடுகளை நாம் பராமரித்து வருவது கிடையாது. முகம் என்னதான் அழகாக இருந்தாலும், உதடுகள் கருத்து இருந்தால், முகத்தின் அழகு எடுபடாது. முகத்தின் அழகை குறைத்து காட்டக்கூடிய நம்முடைய உதடுகளை, ரோஜா இதழ் ஆக மாற்ற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே லிப் பேக் எப்படி தயார் செய்வது, அதை எப்படி உதட்டின் மேல் பயன்படுத்துவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பேக்கை நீங்கள் வெறும் ஒருமுறை போட்டாலே உங்களது உதடுகள் பிங்க் நிறத்தில் மாறுவதை உங்களால் பாக்க முடியும்.

lip

பொதுவாகவே குளிர்காலங்களில் தான், நம்முடைய உதடுகள் வெடிப்பு விடும். அந்த சமயத்தில் நம்முடைய உதடுகளை பாதுகாக்க தேங்காய் எண்ணெய், அல்லது நெய் அல்லது வெண்ணை போன்ற பொருட்களை எப்போதுமே உதடுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வருது வெயில் காலம். இந்த சமயத்தில் உங்களுடைய உதடுகள் ட்ரையாக மாறுகிறது என்றால், உங்களுடைய உடலில் நீர்ச்சத்து இல்லை என்பதுதான் அர்த்தம். அடிக்கடி தண்ணீர் பருகி கொண்டே இருக்க வேண்டும். நிறைய தண்ணீரை குடித்தால் தான் உதடுகள் வறட்சியடையாமல் இருக்கும்.

உங்களுடைய உதடு கருப்பாக என்ன காரணமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். பெண்கள் ஆண்கள் இரு பிரிவினரும் இந்த பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய கண்ணாடி பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1/2 ஸ்பூன் பொடி செய்த சர்க்கரையை போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது கொஞ்சம் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். பொடித்த சர்க்கரை – 1/2 ஸ்பூன், சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1/4 ஸ்பூன், தேன் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூனை வைத்து கலந்து பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.  தண்ணியாக இதை தயார் செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் லெமன் ஜூஸை கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.

lip3

இந்த பேஸ்ட்டை முதலில் உங்களது விரல்களால் தொட்டு, உங்களுடைய உதட்டை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து ஸ்கரப் செய்து மசாஜ் செய்யவேண்டும். வாயை லேசாகத் திறந்து கொண்டு, வட்ட வடிவத்தில் முன் பக்கமும் பின் பக்கமும் மாற்றி மாற்றி உதடுகளை ஸ்கரப் செய்து சுத்தம் செய்ய வேண்டும். 5 நிமிடங்கள் இப்படி செய்தால் போதும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்து ஸ்க்ரப் செய்யக்கூடாது. ரொம்பவும் லேசாகவும் செய்யக்கூடாது. ஜென்டில் மசாஜ் செய்ய வேண்டும்.

அதன்பின்பு ஒரு காட்டன் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து உங்களது உதடுகளை லேசாக அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால், உதட்டில் இருக்கும் டெட் செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். மீண்டும் மிச்சமிருக்கும் பேஸ்டை உங்களது விரல்களால் லேசாகத் தொட்டு உதட்டின் மேல் பேக் போட்டுக் கொள்ளுங்கள். இது 10 நிமிடங்கள் அப்படியே காய விட்டு விட்டு, குளிர்ந்த நீரை கொண்டு உதடுகளை கழுவி விட்டால் போதும். உடனடியாக உங்கள் உதட்டில் இருக்கும் கருமை நிறம் குறைவதை உங்களாலேயே உணர முடியும்.

lip1

தினமும் இப்படி செய்யலாம். ஆனால் தினமும் உதட்டை ஸ்கரப் செய்து மசாஜ் செய்ய வேண்டாம். 10 நாட்களுக்கு ஒரு முறை உதடை ஸ்க்ரப் செய்து கொண்டு, தினமும் இதை பேக்காக மட்டும் போட்டுக் கொண்டால் போதும். பேக்கை மீதம் எடுத்து வைத்து எல்லாம், அடுத்த நாள் உபயோகப்படுத்தக் கூடாது. தினம்தினம் புதியதாக தான் பேக் தயார் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. ஒரே நாளில் பத்து நிமிடத்தில் ரிசல்ட் கிடைப்பது மட்டும் உறுதி.