நந்தியின் வாயில் இருந்து தொடர்ந்து வடியும் ரத்த திரவம் – வீடியோ

nandhi
- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
அனைத்து சிவலிங்கங்களுக்கு முன்பும் நந்தி சிலை இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே போல் தான் இலங்குடி என்னும் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலிற்கு முன்பு ஒரு நந்தி உள்ளது. ஆனால் இந்த நந்தி சிலை மிகவும் விசித்திரமானது. ஆம் இந்த நந்தி சிலையின் வாயில் பல நூறு ஆண்டுகளாக ரத்தம் போன்ற ஒரு திரவம் வழிந்துகொண்டே இருக்கிறது. இதோ அதன் வீடியோ காட்சி.

- Advertisement -

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலங்குடி என்னும் கிராமத்தில் உள்ள இந்த நந்தி சிலையானது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வடிக்கப்பட்டது என்பது சரியாக தெரிய வில்லை. ஆனால் இந்த சில, பார்ப்பதற்கு மிகவும் பழமையாக உள்ளது. இந்த நந்தி சிலை இருக்கும் சிவன் கோவிலானது ஊருக்கு இடையே இல்லாமல், ஊரைவிட்டு தள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் சிற்றரசர்களின் ஒற்றர்கள் தங்குவதற்கு எதுவாக இந்த கோவில் ஊரை விட்டு தள்ளி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே போல இந்த கோவிலில், வேல் வாள் போன்றவற்றை கூர்மை படுத்துவதற்கான சாணக்கள் ஒன்று உள்ளது. அந்த கல்லில் போர் ஆயுதங்கள் பல சாணை பிடிக்கப்பட்டதற்கான சுவடுகளும் உள்ளன. ஆகையால் அந்த காலத்தில் இந்த பகுதியில் சில போர்கள் நடந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இங்குள்ள நந்தி சிலையின் வாயை சுற்று ஒரு வஸ்திரம் கட்டப்பட்டுள்ளது. அந்த வஸ்திரமானது நந்தியின் வாயில் இருந்து வடியும் திரவத்தால் ஒரே நாளில் முற்றிலும் நனைந்துவிடுகிறது. இந்த திரவத்தை பலர் பிரசாதமாகவும் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இந்த திரவமானது எண்ணெய் போன்ற சுவையை கொண்டுள்ளது. அங்கு எத்தனையோ கற்கள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

- Advertisement -