கடனாக கொடுத்த பணம் திரும்பி வர வில்லையா? உங்க வீட்ல இருக்க, இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதுமே!

cash-black-el

கடன் வாங்காமல் இருக்க, வாங்கிய கடனை திருப்பி தர பல பரிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் சில பேர், சிலருக்கு கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். கடனை வாங்குவதற்கு முன்பு, நம் வீட்டிற்கு பத்து முறையாவது வந்து சென்ற கடனாளி, கடன் தொகையை பெற்று விட்ட பின்பு, கடன் பெற்ற அந்த நபரை, தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாது. வலை போட்டு தேடினாலும் கையில் சிக்க மாட்டார்கள் கடனாளிகள்.

kadan

கடன் தொகையை கொடுத்தவர், கடன் பெற்றவரின் வீட்டிற்கு, எத்தனை முறை சென்றாலும் அவரை காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதாவது இந்த இடத்தில் சூழ்நிலை மாறி விடும். கடனாளியைத் தேடி, கடன் கொடுத்தவர் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில் கடனாளியே, கடன் தொகையை நம்மிடம் தேடிவந்து, திருப்பித்தர ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலபேர் கடனாக நகைகளை கொடுத்திருப்பார்கள். சிலர் தங்களுடைய சொந்த பந்தங்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக, அடகு வைப்பதற்கு நகையை கொடுத்து இருப்பார்கள். அந்த நகை கூட திரும்பி வர காலதாமதமாகும். இப்படிப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை தொடங்கிய 48 நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

gold

சதுர வடிவில் ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு வெந்தயம், சிறிதளவு கருப்பு எள், சிறிதளவு கல்லுப்பு, இவை மூன்றையும் ஒன்றாக வைத்து, வெள்ளை நூலில் சிறிய முட்டை வடிவில் கட்டிக்கொள்ள வேண்டும். எல்லாப் பொருட்களிலும் ஒரு ஸ்பூன் அளவு வைத்தால் போதும். அதன்பின்பு, இந்த மூட்டையை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, கொடுத்த கடன், கொடுத்த நகையும் சீக்கிரமே திரும்பி வரவேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து, இந்த மூட்டையை எடுத்து தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்பு. வாரத்திற்கு ஒருநாள் இந்த மூட்டையை எடுத்து இதில் உள்ளே இருக்கும் பழைய பொருட்களை மட்டும் கால் படாத இடங்களில் போட்டுவிட்டு, துணியை துவைத்து, மீண்டும் இந்தப் பொருட்களையெல்லாம் புதிதாக வைத்து மூட்டை கட்டி தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்துவர உங்கள் பிரச்சனைக்கு சுலபமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

arali

ஒருவருடைய வீட்டில் செல்வவளம் நிறைந்திருக்க, ஒரு சிறிய செம்பு பாத்திரத்திலோ அல்லது பித்தளை பாத்திரத்திலோ தண்ணீர் ஊற்றி, அதில் சிகப்பு அரளி பூவை போட்டு வைக்க வேண்டும் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் சொல்கிறது. உங்களது வீட்டில் செல்வ கலாட்சம்  நிறைந்திருக்க வேண்டும் என்றாலும், தொழில் செய்யும் இடத்தில் லாபம் அதிகமாக கிடைக்க வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்துதான் பாருங்களேன்! இரவில் நிம்மதியான தூக்கம் வர வில்லை என்றாலும், இந்த சிகப்பு அரளி பூவை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவது நல்ல பலனைத் தரும். கடனாளிக்கும் தூக்கம் வராது. கடன் கொடுத்தவருக்கு தூக்கம் வராது என்ற காரணத்தினால், நன்றாக தூக்கம் உங்களது கண்களை தழுவ வேண்டும் என்பதற்காக இந்த ஒரு டிப்ஸ். யாரும், யாரையும் அவ்வளவு சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது. பூலோகத்தில் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்காமல் தப்பித்துக் கொண்டாலும், மேலோகத்தில் தண்டனை காத்துக் கொண்டிருக்கின்றது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம் தோறும் பூஜை அறையில் இப்படி செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadan prachanai theera pariharam in Tamil. Kadan prachanai theera Tamil. Kadan theera pariharam Tamil. Vara kadan Tamil.