இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்குதா? இன்று இதனுடைய மதிப்பு என்ன தெரியுமா உங்களுக்கு! பல ஆயிரம், பல லட்சங்களை கூட தாண்டும்.

5-rs-note

வெளியே செல்லாமல் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் இந்த ஆன்லைன் பிசினஸில் பெரும்பாலும் மக்களுக்கு நம்பிக்கை இருப்பது கிடையாது. எதையாவது நம்பி எங்கேயாவது ஏமாந்து விட போகின்றோம் என்ற அச்சம் ஆன்லைன், என்ற வார்த்தையை கேட்ட உடனேயே மக்களுடைய மனதில் வந்து விடுகின்றது. மன பயத்தினை கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். உங்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள், பழைய நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உள்ளதா, நம்பத்தகுந்த ஒரு ஆன்லைன் பிஸ்னஸை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rupee

கடந்த சில வருடங்களாக பழைய ரூபாய் நோட்டுகளுக்கு, பழைய ரூபாய் நாணயங்களுக்கு ஆன்லைனில் பெரிய வரவேற்பு இருக்கின்றது. குறிப்பிட்ட, கிடைப்பதற்கு அரிய சில பழைய ரூபாய் நோட்டுகளை, நாணயங்களை வாங்குவதில் விற்பதிலும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்த லாக்டோன் காலத்தில் வருமானம் இல்லாமல் இருப்பதற்கு, நம் கையில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வீட்டிலிருந்தபடியே விற்பனை செய்து பணத்தை ஈட்டுவது என்பது ஒரு நல்ல வியாபாரம் தான். உங்கள் கையில் இருக்கும் பழைய 5 ரூபாய் நோட்டு, பழைய ஐந்து ரூபாய் நாணயம், பழைய ஒரு ரூபாய் நாணயம், 50 பைசா நாணயம், 25 பைசா நாணயம் என்று புழக்கத்தில் இல்லாத நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அனைத்திற்குமே இன்றைய மதிப்பு, பல ஆயிரங்கள்.

rupee1

நம்ப முடியவில்லையா. ஆனால் இதுதான் உண்மை. இந்த நாணயங்களை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் குறிப்பிட்ட சில வலைதளங்கள் உள்ளன. அந்த வலைதளங்களில் இன்றளவும் இந்த ஆன்லைன் பிஸினஸ் அமோகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

- Advertisement -

தற்போது காயின்பஜார்.காம் என்ற வலை தளம் ஒரு அரிய வாய்ப்பினை மக்களுக்கு கொடுத்திருக்கின்றது. பழைய 5 ரூபாய் நோட்டுகளுக்கு இந்த வலைதளம் பல்லாயிரக்கணக்கான பணத்தினை கொடுக்க முன் வருகின்றது. அதிலும் குறிப்பாக பழைய ரூபாய் நோட்டுகளில் இந்த 5 ரூபாய் நோட்டில் 786 786 என்ற எண் அச்சடிக்கப்பட்டு இருந்தால் அந்த ரூபாய் நோட்டுக்கு நிறையவே டிமாண்ட் உள்ளது. ஆயிரம் என்ன, நீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு கூட இதில் வாய்ப்பு உண்டு.

5-rs-note1

உங்களிடம் இந்த எண் அச்சடிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நோட்டு இருந்தால், உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் இந்த காயின்பஜார்.காம் வலைதளத்தில் அந்த நோட்டை விற்பனை செய்து, ஆயிரக்கணக்கில் பணத்தை சம்பாதிக்க முடியும்.

rupee2

முதலில் இந்த வலைதளத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களிடம் இருக்கும் இந்த ரூபாய் நோட்டையும் ஒரு புகைப்படம் எடுத்து அந்த வலை தளத்தில் பதிவிடுங்கள். அதன்பின்பு உங்களுடைய நோட்டு விற்பனையாகி, அதற்கான தொகையும் ஆன்லைனில் உங்களுக்கு செலுத்தப்படும். நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வீட்டிலிருந்தபடியே எந்தவொரு முதலீடும் செய்யாமல், பணம் சம்பாதிப்பதற்கு இது ஒரு சிறப்பான வழி. விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.