மாசி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

maasi-madha-palan
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய கிரக அமைப்புகள் இருக்கும். 12 கிரகங்களும் தத்தம் இடத்திலிருந்து இம்மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறார்கள்? மேஷம் முதல் மீனம் வரையிலான ராசியினருக்கு மாசி மாதம் எப்படி இருக்கப் போகிறது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் ரொம்பவே அற்புதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கிறது. லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்து உள்ளதால் உங்கள் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்க போகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு உங்களுக்கு நிம்மதி கிடைக்க கூடிய நல்ல மாதமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. பொருளாதார முன்னேற்றம் படிப்படியாக உயரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த சுப காரிய தடைகள் விலகி குதூகலத்துடன் காணப்படும். கணவன் மனைவி பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் விட்டுவிடுவது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் தாமரை மலரால் அம்பாள் வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய, சாதகமான பலன்களை கொடுக்க கூடிய வகையிலான நல்ல அமைப்புள்ள மாதமாக இருக்கிறது. எதிர்பாராத திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை வரலாம். வெளியூர், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் உயரும். புதிய விஷயங்களை புகுத்தி வாடிக்கையாளர்களின் மனதைக் கவர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் உண்டாகும். கணவன்-மனைவி பிரச்சினைகளை ஆற போடுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் வேங்கடவனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காண இருக்கிறீர்கள். உங்கள் விடா முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் போட்டிகள் வலுவாகும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து, பேச்சில் இனிமையை கடைபிடித்தால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: முக்கண்ணுடைய தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டு வந்தால் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலம் தரும் இனிய மாதமாக அமைகிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் இருக்கும். இதுவரை உங்களுக்கு தடையாக இருந்த சில விஷயங்கள் உங்களை விட்டு நீங்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சூடு பிடிக்கத் தொடங்கும். பொருளாதாரம் வளர்ச்சியை காணும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் சில இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நிதானம் கடைபிடிப்பதும் உத்தமம். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு தடைகள் அகலும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். கணவன் மனைவி இடையே இருக்கும் கடினமான பேச்சு வார்த்தைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வெளியிடங்களில் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. புதிய யுத்திகளை கையாளுவதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்க ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்: முழுமுதற்கடவுளான விநாயகரை திங்கட்கிழமையில் வழிபட கேட்டதெல்லாம் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் தரும் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வதால் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் மேலும் வளர்ச்சி காணும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கும். பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.
பரிகாரம்: கலியுக காவல் கடவுளாக இருக்கும் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர துன்பங்கள் அகலும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயலாற்ற கூடிய அற்புதமான மாதமாக இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை தகர்த்தெரிந்து வெற்றி காணும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை மந்த நிலையில் இருந்து மீள கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காண முனைவீர்கள். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சாதக பலன் உண்டு. தேவையற்ற நபர்கள் மீது நம்பிக்கை வைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு குறைபாடுகள் நீங்கும். வம்பு வழக்குகள் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: சோமவார சிவ வழிபாடு செய்து வாருங்கள் சுறுசுறுப்பு உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான நல்ல பலன் தரக்கூடிய அற்புதமான மாதமாக இருக்கிறது. உங்களுக்கு நல்லது செய்பவர்கள் யார்? உடனிருந்து கெடுதி செய்பவர்கள் யார்? என்பதை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கும். புதிய நட்பு வட்டம் விரிவடையும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் சீரான நிலை நீடிக்கும்.
பரிகாரம்: சண்டிகேஸ்வரரை வழிபட சங்கடங்கள் தீரும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் அற்புதமான நல்ல நிகழ்வுகள் நடக்க கூடிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் போன்ற விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான வீண் விரயங்களை எப்போது சந்திக்கலாம் என்பதால் உரிய பராமரிப்பு கொடுப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்: குலதெய்வ பூஜைகள் செய்வது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்றக்கூடிய நல்ல காலமாக அமைய இருக்கிறது. பொலிவிழந்த முகம் மாறி பளிச்சென மின்னும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அவ்வபோது தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படலாம். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் உங்கள் பாதையை நோக்கி பயணிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் காணலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் யோசிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் வலுவாகும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பட்ட கடன்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
பரிகாரம்: புதன் கிழமையில் புதன் பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டு வாருங்கள் தடைகள் அகலும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை காட்டிலும் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தாங்கள் சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைந்த செட்டில் ஆகிவிடுவார்கள். கணவன் மனைவியிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைத்து தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் அவ்வபோது வந்து செல்லும்.
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானையும் வழிபட்டு வாருங்கள் பிரகாசமான வாழ்வு உண்டாகும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருப்பதால் பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது. பொருளாதார பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மூத்தவர்கள் பேச்சை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அவசர முடிவுகள் சில இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் நிதானம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும் என்பதால் அவ்வபோது மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. பெண்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
பரிகாரம்: வியாழன் கிழமையில் குருபகவான் வழிபாடு செய்து கொண்டை கடலை தானம் செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -