அடிக்கடி ஆபத்துக்களை சந்திக்கிறீர்களா? கெட்டது நடக்கும் என்கிற உணர்வு இருக்கிறதா? அப்படின்னா வெளியில் கிளம்பும் முன்பு இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்!

sivan-eman
- Advertisement -

எல்லோருக்கும் இது போல் நடப்பது இல்லை என்றாலும் எல்லோருமே தன்னுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது போல் ஒரு உணர்வை அனுபவித்து இருப்பார்கள். நமக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யும். தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம் இம் மந்திரத்தின் விளக்கம் என்ன சக்தி என்ன என்கிற ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் என்பது சிவ மந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒரு மந்திரம் ஆகும். இம்மந்திரம் முக்கண் உடைய சிவபெருமானிடம் நாம் சாகாமையை வரம் கேட்பதாக அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பழமை வாய்ந்த இந்த மந்திரம் நான்கு வேதங்களில் ரிக் வேதம், யஜுர் வேதம் ஆகிய இரண்டு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் மார்க்கண்டேய முனிவரால் கண்டறியப்பட்டது என்று சில நூல்கள் குறிப்பிடுகிறது. தொன்மை வாய்ந்த சில மந்திரங்களுக்கு அதீத சக்தியும் உண்டு. இந்த மந்திரங்களை ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் பெருமளவு பயன்படுத்தியுள்ளார்கள். சிவனுக்கு உரிய மந்திரங்களில் இந்த மஹா மிருத்யுஞ்சய மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மஹா மிருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்!!!!
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத்!!!

- Advertisement -

ஓம் என்பது பொதுவான பிரணவ மந்திரம் ஆகும். த்ரயம்பகம் என்பது முக்கண்களை உடையவர் என்பதை குறிக்கிறது. யஜாமஹே என்பது முக்கண் உடையவரை யாகத்தின் மூலம் பூஜை செய்கிறோம் என்பதை நாம் குறிப்பிடுகிறோம். சுகந்திம் என்பது நறுமணத்தை குறிக்கிறது, எல்லா வளங்களையும் குறிக்கிறது. புஷ்டி என்றால் ஊட்டம் ஆகும், எல்லா நலமும், ஊட்டமும் பெறுவது ஆகும். வர்த்தனம் என்பது பெருக செய்வது, உருவாருகமிவ என்பது வெள்ளரி பழத்தை போல என்பதை குறிக்கிறது. பந்தனாத் ம்ருத்யூர் என்பது இறப்பின் பிடியிலிருந்து என்பதையும், முக்ஷீய என்பது விடுவித்து என்பதையும், மா என்றால் எனக்கு என்பதையும், அம்ருதாத் என்பது சாகாமையை அருள்க என்பதையும் குறிக்கிறது.

மந்திரத்தின் பொருள்:
முக்கண்களைக் கொண்ட ஈசனே! எல்லா வளமும், நலமும், ஊட்டமும் பெருகும்படி செய்யும் உன்னை, யாகம் செய்து பூஜிக்கிறேன்! வெள்ளரிப்பழம் போல இறப்பின் பிடியிலிருந்து விடுதலை செய்து சாகாமையை அருள்க.
468″ />

- Advertisement -

மந்திரத்தின் விளக்கம்:
எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு ஈசனுக்கு இருக்கிறது என்றால் அது முக்கண்கள் ஆகும். அழித்தல் தொழிலை செய்யும் ஈசனிடம் இறவாமையை அருளும் சக்தி உண்டு என்பதற்கு இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் கண்ணால் யாவற்றையும் அழிக்கும் திறன் படைத்தவருக்கு எமனையும் அழிக்கும் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைகிறது.

சிவபெருமான் அவர் மீது பக்தி இல்லாவிட்டால் கூட நமக்கு வேண்டிய வரங்களை அருள்பவர் ஆவார். இந்த வகையில் நமக்கு எல்லா நறுமணத்தையும், ஊட்டத்தையும், நலன்களையும், வளங்களையும் அருள்வார் என்பதை குறிப்பிடுகின்றோம். யாகம் செய்தல் என்பது பூஜை செய்வதை குறைக்கிறது. வெள்ளரிக்காய் போல என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? வெள்ளரிக்காய் தன் கொடியில் காயாக இருக்கும் பொழுது கொடி அதனை விட்டு விடுவது இல்லை. சரியான பக்குவம் அடைந்து பழுத்த பின்பு தான் கொடி அந்த வெள்ளரிக்காயை தன்னுடைய பிடியிலிருந்து விடுவிக்கிறது.

அதே போல இறப்பு என்பது நாம் நினைக்கும் பொழுது நடக்கும் ஒரு விஷயம் அல்ல. இறைவன் பிடியில் இருக்கும் நம்முடைய இறப்பை பக்குவம் வரும் பொழுது தான் அடைய முடிகிறது. பிறந்த உடனேயே இறந்து போகும் சிசுவும் உண்டு. சாகாமை என்பது இப்பிறவியில் நாம் இறந்து போவது அல்ல.. மனித உடல் ஒரு கருவி தான். பிறவிகள் பல எடுத்து அதனை இயக்கும் ஆத்மாவிலிருந்து விடுவிக்க இந்த சக்தி வாய்ந்த மந்திரம் உச்சரிக்க படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வளவு அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை பொருளுணர்ந்து உச்சரிக்கும் பொழுது அதன் பலனும் இரட்டிப்பாகிறது. பயம் உங்களை ஆட்கொள்ளும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு வெளியில் செல்லுங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -