சிவராத்திரியன்று விரதமிருந்து தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடைவதற்கு இதுதான் காரணமா?

சிவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது, தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடையலாம் என்பதும், இரண்டாவதாக எதுவும் சாப்பிடாமல் நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதும்தான். இதைத்தான் நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள். ஆனால் எவ்வளவோ வழிபாட்டு முறைகள் இருந்தும், குறிப்பாக சிவராத்திரியன்று மட்டும் இரவு தூங்காமல் இருப்பதற்கும், சாப்பிடாமல் இருப்பதற்கும் என்ன காரணம், என்று நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது. இந்த சிறிய புராண கதையை நாம் தெரிந்து கொள்வதன் மூலம், மகாசிவராத்திரியன்று எதற்காக நோன்பு இருந்து, கண் விழிக்கின்றோம்? என்பதற்கான காரணத்தையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

sivan-god2

சிவராத்திரியின் மகிமைகளை நமக்கு உணர்த்த எத்தனையோ புராண கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது. சண்டன் என்று பெயருடைய வேடன் ஒருவன் காட்டில் வாழ்ந்து வந்தான். விலங்குகளை வேட்டையாடி தன் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தான். அந்த வேடனுக்கு எதிர்பாராத ஒரு சமயம் வில்வ மரத்தடியில் சுயம்பு வடிவிலான லிங்கம் ஒன்று கிடைத்தது. அதைக்கண்ட வேடன் சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடிப் போய்விட்டான். ‘சாதாரண வேடனான எனக்கு சிவபெருமானின் தரிசனம் தானாகவே கிடைத்தது பாக்கியம்’ என்று எண்ணி உறைந்து போய் நின்று விட்டான்.

அந்த சமயம் பார்த்து வழி தவறிய சிங்க கேது மன்னன் காட்டிற்குள் வந்தார். காட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போதுதான், அங்கு சிவபெருமானின் முன் சிலை போல் நின்று கொண்டிருக்கும் வேடனை கண்டார் மன்னன். வேலனுக்குத்தான் காட்டின் நான்கு திசைகளுக்கும் நன்றாக வழி தெரியுமல்லவா? இதனால் வேடனின் துணைகொண்டு காட்டினை கடந்து செல்லலாம் என்று நினைத்து, அந்த வேடனை உயர்ந்த குரலில் அழைத்தார். ஆனால் வேடனோ ‘சிவபெருமானைக் கண்டு மெய்மறந்து நின்று கொண்டு இருக்கிறானே’! அவன் காதுகளில் ராஜாவின் குரல் எப்படி கேட்கும்?’

sivan-4

வேடனின் பின் பக்கமாக சென்ற ராஜா, வேடனை தன் கைகளால் தட்டி அழைத்த பின்புதான், வேடன் சுயநினைவிற்கு திரும்பினான். ராஜாவை கண்டு திக் என்று பதறினான். ‘என்னை மன்னித்துவிடுங்கள் ராஜா! சிவபெருமானை பார்த்ததில் நான் என்னையே மறந்துவிட்டேன். நீங்கள் வந்ததை கவனிக்காமல் நின்றதற்கு மனதார தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்’. என்று ராஜாவிடம் பணிவோடு நடந்து கொண்டான். இதோடு சேர்த்து அந்த ராஜாவிடம் வேடன் கூறியதாவது: ‘சிவபெருமானை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கான வழிமுறைகளை ராஜாவான தாங்கள் தான் கூற வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.’

- Advertisement -

ராஜாவும், நல்லது கெட்டது அறியாத வேடனுக்கு ஒரு வழியைக் கூறினார். அது என்னவென்றால் ‘உன் கையில் வைத்திருக்கும் தோல் பையில் தண்ணீரை கொண்டுவந்து ஈசனுக்கு அபிஷேகம் செய். சுடுகாட்டிற்குச் சென்று பிணத்தின் சாம்பலை எடுத்துக்கொண்டு வந்து சிவனுக்கு பூசு. நீ சாப்பிடும் உணவுப்பண்டங்களையே உன் எம்பெருமானுக்கும் நைவேத்தியமாக படையல் போடு.’ என்று ஏளனமாக தான் இந்த வழிபாட்டை வேடனிடம் கூறினார் அரசர்.

sivan-vedan

ஆனால் ராஜா சொன்னதை அப்படியே நம்பும் அளவிற்கு வெகுளியான குணம் கொண்டவன் தான் வேடன். ராஜா சொன்னதை மனதில் அப்படியே பதிய வைத்துக்கொண்டு தினம்தோறும் சிவபெருமானை வழிபட்டு வந்தான் வேடன். ஒருநாள் என்ன ஆயிற்று! சுற்றியிருக்கும் சுடுகாடுகளில் ஒரு பிணம் கூட எரிக்கப்படவில்லை. சாம்பலும் கிடைக்கவில்லை. எம்பெருமானின் பூஜையை, அந்த நாளில் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இதனால் கவலை கொண்ட வேடன், அந்த நாள் முழுவதும் உண்ணாமல், உறங்காமல் எம்பெருமானை நினைத்துக்கொண்டே கவலையோடு அமர்ந்திருந்தார்.

வேடனின் மனதை அறிந்து கொண்ட வேடனின் மனைவி சண்டிகா, தனது கணவனின் பூஜையை பூர்த்தி செய்வதற்காக ஒரு வழியைக் கூறினாள். சண்டிகா கூறியதாவது: சடலத்தின் சாம்பல் கிடைக்க வேண்டுமென்றால் ஒரு வழி உள்ளது. ‘நாம் தங்கியிருக்கும் இந்தக் குடிசையை தீ வைத்து எடுத்துவிடுங்கள். அந்த தீக்கு நான் இரையாகின்றேன். என்னுடைய சாம்பலை எடுத்து சிவபெருமானுக்கு பூசி உங்களது பூஜையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினாள்.’

seetha-fire

வேடனும் தன் மனைவி கூறியபடியே குடிசையை எரித்து, தன்னுடைய மனைவியை தீக்கிரையாக்கி அந்த சாம்பலை எடுத்து சிவபெருமானுக்கு பூசி அவனது பூஜையை பரிபூரணமாக நிறைவேற்றினான். என்ன பக்தி இது? கேட்பவர்களை வியக்க வைக்கும் அளவிற்கு அல்லவா உள்ளது! இந்த வேடன் உண்ணாமல் உறங்காமல் சிவபெருமானை நினைத்து உருகி இருந்த இந்த ராத்திரியை தான் சிவராத்திரியாக நாம் இன்று கொண்டாடி வருகின்றோம்.

வேடனின் பக்திக்கு மனம் இரங்கிய சிவபெருமான் நேரில் தோன்றி ‘வேடனின் மனைவியை உயிருடன் மீட்பு தந்ததோடு, நிறைவான வாழ்க்கையையும் அந்த வேடனுக்கு அளித்தார். இதோடு மட்டுமல்லாமல் இவர்களது இறுதி காலகட்டத்தில் மோட்சத்தை அடைவார்கள், என்ற வரத்தையும், வேடனைப் போல் உண்ணாமல் உறங்காமல் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அனைத்துவிதமான செல்வமும் கிடைக்கும், என்ற வரத்தையும் எம்பெருமான் சண்டனுக்கு வரமாக தந்தார்.

llingam

வேடன் உண்ணாமல் உறங்காமல் எம்பெருமானை நினைத்து வழிபடும் இந்த ராத்திரிதான் சிவராத்திரியாக நாம் கொண்டாடுகின்றோம் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. வேடனைபோல் உண்ணாமல், உறங்காமலம் நாமும் அந்த எம்பெருமானை நினைத்து மகாசிவராத்திரியன்று வழிபட்டால் எல்லா வகையான செல்வத்தையும் பெற்று, மோட்சம் அடையலாம் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
மகா சிவராத்திரி விரதத்தின் முழு பலனை அடைய இதை செய்ய மறக்காதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maha shivaratri 2020 in Tamil. Maha shivaratri story in Tamil. Maha shivaratri story Tamil. Maha shivaratri vratham in Tamil.