மகா சிவராத்திரியான இன்று, எம்பெருமானை இந்த மந்திரத்தைச் சொல்லி, இப்படி வழிபட்டால் எல்லா வகையான செல்வமும் கிடைக்கும்.

sivan-mantra
- Advertisement -

சிவராத்திரி தினத்தன்று எம்பெருமானை திரிகரண சுத்தியோடு வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. திரிகரண சுத்தி என்றால் என்ன? நம்முடைய எண்ணம், வாக்கு, உடல் இவை மூன்றும் சுத்தமாக வைத்துக் கொள்வதே திரிகரண சுத்தி. நம்முடைய எண்ணம் நம்முடைய, மனது இவைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள தியானத்தில் ஈடுபடுவது நல்லது. கெட்ட வார்த்தைகள், எதிர்மறையான வார்த்தைகள் கூடவே கூடாது. நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நேர்மறையாக இருப்பது நல்லது. இவையோடு சேர்த்து நம்முடைய உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை சுத்தம் செய்வதற்கு சிறப்பான வழி விரதம். ஆகவே எம்பெருமானை வழிபடும்போது நம்முடைய எண்ணம்,மனது, உடல் இவை மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உடல் சுத்தம் என்பது உள் உறுப்பை சுத்தம் செய்ய விரதம் இருப்பதையும் குறிக்கும். குளித்து முடித்துவிட்டு சுத்தமாக இருப்பதையும் குறிக்கும். சிவராத்திரி அன்றுதான் திரிகரண சுத்தியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு மனிதன் சிறந்த மனிதனாக வாழ வேண்டுமென்றால், இங்கு மேலே கூறப்பட்டுள்ள மூன்று விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்தாலே போதும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடும் போது திரிகரண சுத்தியை பின்பற்றுவது மிகவும் சிறந்தது.

sivan

அடுத்ததாக சிவபெருமானை எந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் எல்லா வகையான செல்வத்தையும் பெற முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

திருநாவுக்கரசர் பாடிய பாடல்:
பேராயிரம் பரவி வானோர்
ஏத்தும்பெம்மானைப், பிரிவிலா
அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை,
மந்திரமும் தந்திரமும்
மருந்தும் ஆகி தீராநோய் தீர்த்து அருள
வல்லான்தன்னைத்திரிபுரங்கள்
தீஎழத் திண் சிலை கைக்கொண்ட போரானை, புள்ளிருக்கு
வேளுரானைப்போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே

sivan

சிவராத்திரி அன்று சிவபெருமானை இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்து வணங்கினால் போதும். நோய் நொடியற்ற வாழ்க்கையும், குன்றாத செல்வமும் பெற்று வளமான வாழ்க்கையினை பெரும் வரம் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த மந்திரத்தோடு சேர்த்து எம்பெருமானை வில்வ இலையால் அர்ச்சனை செய்யும்போது தவறாமல் இந்த மந்திரத்தையும் 108 முறை உச்சரித்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையின் தீராத கஷ்டங்கள் கூட தீர்த்து வைக்கும் சிவ மந்திரம் இதோ.

சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்
ஓம் நமசிவாய!

- Advertisement -

உங்களது வீட்டில் லிங்கவடிவில் எம்பெருமான் இருந்தாலும், திருஉருவ படத்தில் எம்பெருமான் இருந்தாலும், கட்டாயம் சிவராத்திரி அன்று, அந்த சிவ பெருமானின் திரு உருவத்திற்கு அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை யோடு சேர்த்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது உண்டாகும் பலன் நிச்சயம் இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனை முடிந்தவுடன் கட்டாயம் தீப தூப ஆராதனை அவசியம்.

marundeeswarar-sivan-temple

அடுத்ததாக எப்போது சிவன் கோவிலுக்கு சென்றாலும் அந்த எம்பெருமானை ஆவுடைக்கு எதிர்ப்பக்கமாக நின்று தரிசனம் செய்யுங்கள். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தண்ணீர் வெளியேறும் திசையை ஆவுடை என்று கூறுவார்கள். ஆவுடை எந்த திசை பார்த்து இருக்கின்றதோ அந்தப் பக்கம் நின்று சிவனை தரிசனம் செய்யக்கூடாது. சிவனுக்கு இடது பக்கத்தில் தான் ஆவுடை இருக்கும். நீங்கள் சிவனுக்கு வலது பக்கம் நின்று சிவனை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதிகம். இப்படி நின்று அந்த எம்பெருமானை வழிபட்டு தான் பாருங்களேன். இந்த முறையை நீங்கள் பலபேருக்கு சொல்லுமளவிற்கு பலனைப் பெறுவீர்கள்.

உங்களால் முடிந்தால் சிவபெருமானுக்கு நைவேத்தியமாக பிரசாதம் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். விரதம் இருப்பவர்களுக்கு அல்ல. விரதம் அல்லாதவர்களுக்கு தான் பிரசாதத்தை கொடுக்க வேண்டும். இது கோடி புண்ணியத்தைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
சிவராத்திரி அன்று சிவனுக்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜையின் சிறப்புக்களை தெரிந்துகொண்டு விரதம் இருப்பதே புண்ணியம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maha shivaratri manthiram in Tamil. Maha shivaratri 2020 in Tamil. Maha shivaratri valipadu Tamil. Maha shivaratri mantras in Tamil. Maha shivaratri slokas in Tamil.

- Advertisement -