மகாலட்சுமியிடம் உரையாடி, உங்களின் கோரிக்கைகளை வைக்க வேண்டுமா? இந்த ஒரு மந்திரம் போதும்.

mahalakshmi

எப்படிப்பட்ட பரிகாரங்கள் செய்தாலும், எப்படிப்பட்ட பூஜைகள் செய்தாலும் பலன் அளிக்கவில்லை. பிரச்சனைகள் தொடர்ந்து பின் வந்து கொண்டே இருக்கின்றது. கையில் கிடைக்கும் வருமானத்தில் சிறு தொகையைக் கூட சேமிப்பு வைக்க முடியாதவர்கள், வருமானம் அனைத்தையும் மருத்துவமனைக்கு செலவு செய்பவர்கள், எதிர்பாராத நஷ்டத்தை சந்திப்பவர்கள், இப்படி தொடர் கஷ்டங்கள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது. அந்த மகாலட்சுமியிடம் உங்களது குறைகளை நேரடியாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எப்படிப்பட்ட குறைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர்தான் அந்த லட்சுமி தேவி. உங்களின் வேண்டுதல் மகாலட்சுமியின் செவிகளில் விழுவதற்கான சிறப்பான மந்திரம் ஒன்று இருக்கின்றது. அப்படி ஒரு மந்திரம்? தெரிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது.

mahalakshmi

நமக்கு இருக்கும் எப்படி பட்ட கஷ்டங்களாக இருந்தாலும், உண்மையாக மனமுருகி வேண்டும் போது அந்த இறைவனின் காதில் கட்டாயம் கேட்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் எதிலும் முறை என்று, ஒன்று இருக்கிறதல்லவா? பூஜையும், புனஸ்காரங்களும் நம் முன்னோர்களால் வரையறையோடு தான் கூறப்பட்டுள்ளது. காலம் போன போக்கில் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று, அவர்கள் சொல்லி விட்டு செல்லவில்லை. எல்லா ஆன்மீக முறைக்கும் காரண காரியங்களோடு தான் நம்முடைய சாஸ்திரத்தில், பரிகாரமும் பூஜையும் மந்திரமும் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆன்மிக வழிபாடுகளை முறையாக பின்பற்றுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி விரைவில் கிடைக்கும்.

நமக்கு லட்சுமி கலாட்சத்தையும், வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும், தேடித் தரக் கூடிய ஒரு வழிபாட்டு முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக மகாலட்சுமி வழிபாடு என்றாலே அதை வெள்ளிக்கிழமை அன்று, நாம் எல்லோரும் செய்வது வழக்கம். நம்முடைய வீட்டை எப்போதும் போல் சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றிய பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும். ஆனால் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, உங்கள் கைகளில் தாமரை மணி மாலை, அல்லது துளசி மணி மாலை இருந்தால் மிகவும் சிறப்பானது. 108 என்ற எண்ணிக்கையில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை உச்சரிக்கும் போதும் அந்த மாலையில் கணக்கை வைத்துக் கொள்ளலாம்.

thamarai-mani-malai

இந்த மாலையை தான் கையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமா? என்றால், அவசியம் கிடையாது. மல்லிகை பூ அல்லது மஞ்சள் அல்லது கொட்டைப்பாக்கு இவைகளை 108 என்ற கணக்கில் எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறை மந்திரத்தை உச்சரித்து முடிக்கும் போதும், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக தனி பாத்திரத்தில் எடுத்து போடும்போது, உங்களுக்கு கணக்கு தெரிந்துவிடும்.

- Advertisement -

இப்படியாக மகாலக்ஷ்மியை மனதார நினைத்து, மனம் உருகி வேண்டி, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வாரம்தோறும் இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை அன்று 108 முறை உச்சரித்தால் மிகவும் நல்லது. முடியாதவர்கள் பௌர்ணமி தினத்தன்று, மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மகாலட்சுமியின் மந்திரம் இதோ..

mahalakshmi

தன ஆகர்ஷன மந்திரம்:
ராஜ வஸ்ய. தன வஸ்ய. புருஷ வஸ்ய. ஸ்திரீ வஸ்ய.
புத்ர வஸ்ய. சர்வ சம்பத் வஸ்ய.
நாகலோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜிவ பிராணிகளும்
உன் வசமானார் போல்
எங்கள் குடும்ப வசமாக வஸ்ய வஸ்ய ஓம் சுவாஹா! !

மந்திரத்தை அனாவசியமாக உச்சரிக்கக் கூடாது. மகாலட்சுமி தாயாரின் முன்பு தீபம் ஏற்றி வைத்த பின்பே உச்சரிக்க வேண்டும். பிழையில்லாமல் உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே
நல்ல குணமுடைய வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமா? இந்த மந்திரத்தைச் சொல்லி இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi Mantra Tamil. Mahalakshmi mantras Tamil. Mahalakshmi valipadu in tamil. Mahalakshmi stuti Tamil.