வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியின் பூரண அருள் பெற இந்த திரியில் இப்படி தீபம் ஏற்றுங்கள்! எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் நொடியில் நீங்கும்.

lakshmi-lotus

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு செய்ய வேண்டிய பூஜை, புனஸ்காரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். அதில் இந்த திரி கொண்டு தீபம் ஏற்றும் பொழுது இன்னும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்வதாக சாத்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அவ்வகையில் இந்த சில விஷயங்களை செய்யும் பொழுது மகாலட்சுமி யுடைய பரிபூரணமான அருள் நமக்குக் கிடைக்கும். வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடிய இந்த பரிஹாரம் வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அதை எப்படி முறையாக அனுஷ்டிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

gajalakshmi

மகாலட்சுமி தேவிக்கு இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அள்ள அள்ள குறையாத செல்வ வளம் நமக்கு உண்டாகும். எத்தகைய வறுமையில் இருப்பவர்களும் வறுமை நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்கிறது சாஸ்திரங்கள். தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது 9 வெள்ளிக் கிழமைகளில் செய்யலாம். உங்களிடம் உள்ள பித்தளை, செம்பு அல்லது வெள்ளி தாம்பூலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த ஒரு உலோகத்திலும் தாம்பூலம் பயன்படுத்தக் கூடாது.

அதில் புதிதாக வாங்கிய 9 அகல் விளக்குகளை வைத்து கொள்ள வேண்டும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது 9 அல்லது 27 அகல் விளக்குகளை கொண்டும் செய்யலாம். ஒன்பது அகல் விளக்குகளில் நெய் ஊற்ற வேண்டும். 9 அகல் விளக்குகளுக்கும் மூன்று பக்கமும் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளக்கிற்கும் பக்கத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். ஒன்பது அகல் விளக்குகள் வைத்திருந்தால் ஒன்பது நாணயங்களும், 27 அகல் விளக்கு வைப்பவர்கள் 27 ஒரு ரூபாய் நாணயங்களையும் வைக்க வேண்டும்.

neideepam

விளக்கில் பஞ்சு திரி பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ஒரு திரியையும் பயன்படுத்தக் கூடாது. பஞ்சு திரியுடன் தாமரை தண்டு திரி சேர்த்து முறுக்கி கொள்ள வேண்டும். தாமரையில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள். இந்த தாமரையை தண்டினால் செய்யப்படும் திரியானது செல்வ வளத்தை நமக்கு வாரி வழங்கக்கூடிய சக்திகளைக் கொண்டுள்ளது. மேலும் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்து நிம்மதியான சூழ்நிலையை உருவாக்கித் தரும். கடன் பிரச்சினைகள் தீரவும் சுபகாரியங்கள் கைகூடி வரவும் தாமரை தண்டு திரியை கொண்டு தீபம் ஏற்றலாம்.

இரண்டு திரிகளையும் ஒன்றாக்கி நெய்யில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த இனிப்பு பதார்த்தங்கள் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் வைக்க வேண்டும். மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான சர்க்கரைப் பொங்கல் படைப்பது இன்னும் சிறப்பு. மேலும் மகாலட்சுமி படத்தை அலங்காரம் செய்து தாமரை மலர் ஒன்றை வைக்க வேண்டும். பின்னர் தாம்பூலத்தை வடக்கு அல்லது கிழக்கு நோக்கிய திசையில் தீபம் எரியும்படி வைக்க வேண்டும். கீழ்வரும் இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது மகாலட்சுமிக்கு உதிரி பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். இப்படி தொடர்ந்து செய்துவர உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவ்வளவும் நீங்கி நல்லதொரு சுபீட்சமும், முன்னேற்றமும் கண்கூடாக காண்பீர்கள்.

senthamarai

ஐஷ்வர்ய மந்திரம்:
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம!
ஓம் ஐஸ்வர்ய தேவியை நம!
ஓம் சௌபாக்ய தேவியை நம!