லட்சுமி கடாட்சம் பெற துதிக்க வேண்டிய மகாலட்சுமி ஸ்தோத்திரம்

latchumi-kadacham-compressed

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்றாலும், நல்ல விதமாக வாழ்வதற்கு பணம் இன்றியமையாததாக இருக்கிறது. பொருள் சேர்ப்பதற்கு பலரும் பல விதமான வேலைகள், தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றை செய்தாலும் சராசரி அளவில் மட்டுமே பணம் கிடைக்கிறது. ஆனால் இத்தகைய வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் அதிக பணவரவு மற்றும் திடீர் பொருள் சேர்க்கை உண்டாகிறது. இதை தான் நமது முன்னோர்கள் “லட்சுமி கடாச்சம்” என்றனர். அக்கடாட்சம் நமக்கும் ஏற்படுவதற்கான “மகாலட்சுமி ஸ்தோத்திரம்” இதோ.

mahalakshmi

மகாலட்சுமி ஸ்தோத்திரம்

பத்மாஸன ஸ்திதே தேவிபரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞயே ஸர்வ வர்தே ஸர்வ துஷ்ட பயம்காரீ
ஸர்வ துக்க ஹர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

செல்வம் மற்றும் வளமையை அருளும் மகாலட்சுமியை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு மகாலட்சுமியின் படத்திற்கு பத்திகள் கொளுத்தி வைத்து, ஏதேனும் ஒரு பழத்தை நைவேத்தியமாக வைத்து, 27 முறை அல்லது 108 முறை துதித்து வர வேண்டும். இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பவர்கள் முடிந்த அளவிற்கு உடல் மற்றும் மன சுத்தியை கடைபிடித்து வர வேண்டும். மேலே கூறப்பட்ட வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உங்களுக்கு “லட்சுமி கடாட்சம்” உண்டாகி பொருள் சேர்க்கை அதிகம் ஏற்படும் நிலை உண்டாகும். நீங்கள் எதிர்பாராத வண்ணம் திடீர் பண வரவிற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். உங்க தொழில், வியாபார கூடங்களில் மட்டும் இல்லங்களில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் லட்சுமி விளக்கு அல்லது காமாட்சி விளக்குகளில் விளக்கெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வந்தால் மகாலட்சுமி ஸ்தோத்திர உபாசனையின் பலன்களை அதிகரிக்கும்.

lakshmi

பத்மம் எனப்படும் தாமரையின் மீது வீற்றிருக்கும் லட்சுமி தாயே, பிரம்ம ஸ்வரூபம் எனப்படும் அனைத்தின் வடிவமாக இருப்பது நீயே. உலகங்கள் அனைத்திற்கும் ஜகன்மாதாவாக இருக்கின்ற மகாலட்சுமி தாயே உன்னை நமஸ்கரிக்கிறேன். எல்லா ஞானங்களின் வடிவாக இருக்கின்ற தாயே. எல்லோருக்கும் நலங்கள் அனைத்தையும் அருளி, பயங்கள் அனைத்தையும் நீக்குபவளே, எங்களது துன்பங்கள் அனைத்தையும் அறுப்பவளான மகாலட்சுமி தேவி உங்களை நமஸ்கரிக்கிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
அபிராமி துதி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mahalakshmi stotram in Tamil. It is also called as Mahalakshmi mantra in Tamil or Mahalakshmi manthiram in Tamil.