வெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து  மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.

vetrilai-lakshmi

வெற்றி என்றாலே அது வெற்றிலைக்கு சொந்தமான ஒன்று தான். வெற்றிலையை வைத்து நாம் வழிபாடு செய்தால், நாம் வைக்கும் வேண்டுதலுக்கு நிச்சயம் உடனே பலன் உண்டு. இதனால்தான் பூஜைக்கு வெற்றிலை பாக்குக்கு முதலிடம் தரப்படுகிறது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். அதாவது தாம்பூலம் தரிப்பது என்றும் இதை சொல்லலாம். இப்படியாக தாம்பூலம் தரித்த வாயோடு அவர்கள் எந்த வாக்கை சொன்னாலும், அது உடனே பலிக்கும் என்பதும் உண்மையான ஒரு விஷயம்தான்.  வெற்றிலைக்கு அப்படி ஒரு மகத்துவம்.

மகாலட்சுமி வாசம் செய்யும் இந்த வெற்றிலையை வைத்து ஒரு சுலபமான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய தடைகளை தகர்த்து, கண் திருஷ்டியால் வரக்கூடிய பிரச்சினைகளை தவிடு பொடியாக்கி, வெற்றி வாகை சூட வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி முன்பாக வெற்றிலையில் இந்த பொருட்களையெல்லாம் வைத்து, ஒரு பொட்டலம் போல் கட்டி மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்தால் போதும்.

வெள்ளிக்கிழமை என்றாலே நம் எல்லோரது வீட்டிலும் நிச்சயம் பூஜை இருக்கும். எப்பவும் போல உங்கள் வீட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தீபங்களை ஏற்றி வைத்து விடுங்கள். காலை அல்லது மாலை எப்போது உங்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து மகா லட்சுமியை வழிபடலாம்.

vetrilai

பெரிய அளவிலான ஒரு வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் எந்த ஒரு சேதாரமும் இருக்கக் கூடாது. முதலில் அந்த வெற்றிலையை தண்ணீரால் கழுவி வைத்து, சுத்தமான துணியை கொண்டு துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக அந்த வெற்றிலையின் மேல் கொட்டைப் பாக்கு 2, புனுகு ஒரு சிட்டிகை, படிகாரம் ஒரு சிறிய துண்டு, தர்ப்பைப்புல் சிறிதளவு, அறுகம்புல் சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் வெற்றிலையில் அடங்கும் படி வைத்து, அந்த வெற்றிலையை மடித்து ஒரு மஞ்சள் நூல் போட்டு கட்டி, அந்த பொருட்கள் வெளியில் வராதபடி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்தப் பொட்டலத்தை அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிட்டு, உங்களுக்கு மகாலட்சுமியின் அஷ்டோத்திரம் தெரிந்தால் உங்களது வாயால் உச்சரித்து, புஷ்பங்களால் அல்லது குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் தொலைபேசியில் ஸ்தோத்திரத்தை ஒலிக்க செய்துவிட்டு, குங்கும அர்ச்சனை செய்தாலும் அதில் நல்ல பலனை பெற முடியும். ஆக மொத்தத்தில் உங்களுடைய வீட்டில் மகாலட்சுமியின் சோஸ்திரம் ஒலிக்க பட வேண்டும்.

poojai arai

அந்தக் காலத்தில் சித்தர்கள் பெரிய அளவில் சொன்ன பரிகாரம், இப்போதும் சுலபமான முறையில் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வாழ்க்கையில் தொடர் தோல்விகள் இருந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏதாவது ஒரு காரணத்தால் தடைபட்டுக் கொண்டே வருகின்றது என்ற சூழ்நிலையில் தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் இப்படி மகாலட்சுமியிடம் உங்களது வேண்டுதலை வைத்து பாருங்கள் நிச்சயம் வெற்றி உங்களை தேடி வரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்க இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்! நல்ல பலன் கிடைக்குமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.