- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவரலட்சுமி விரதத்தன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

வரலட்சுமி விரதத்தன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

- Advertisement -

நாளை வரலட்சுமி விரதம். பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறுவதற்காக நாளைய தினம் சிறப்பு வழிபாடுகளையும் பூஜைகளையும் விரதத்தை மேற்கொள்வார்கள். இந்த வரலட்சுமி பூஜையோடு சேர்த்து நாளைய தினம் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையும் வந்திருக்கிறது. இந்த நாளில் மகாலட்சுமியின் அருளாசியையும் நாம் பெறுவதற்கு உண்டான ஒரு சூட்சம வழிபாட்டையும், மந்திரத்தையும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நீங்கள் கலசம் நிறுத்தி வரலட்சுமி பூஜை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் சரி, மகாலட்சுமியின் திருவுருவ படத்தை வைத்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களாக இருந்தாலும் சரி, எதுவுமே செய்யவில்லை வெறும் விளக்கு மட்டும் தான் வெள்ளிக்கிழமை வீட்டில் ஏற்ற முடியும், என்பவர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கான செல்வக் கடாட்சம் பல மடங்கு உயர வேண்டும் என்றால், நாளை இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்.

- Advertisement -

நாளைய தினம் யார் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும். எவ்வளவு செல்வ வளம் உங்கள் வீட்டுக்காக நீங்கள் கேட்டாலும், அதை மகாலட்சுமி வாரி வழங்குவாள். எவ்வளவு தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் தேவை என்றாலும் அதை மகாலட்சுமியிடம் கேளுங்கள்.

நாளைய தினம் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்கு இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை 6:30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மகாலட்சுமிக்கு உகந்த ஏதாவது ஒரு நெய்வேத்தியம், 1 டம்ளர் பசும் பால், நாட்டு சர்க்கரை போட்டு வைத்தாலும் சரி, அல்லது உங்களால் சர்க்கரை பொங்கல் போன்ற பொருட்களை நெய்வாத்தியமாக வைக்க முடியும் என்றாலும் செய்து வைக்கலாம்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அதன் மேலே வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி அமர்ந்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தால் கூட போதும். அதிகபட்சம் 27 முறை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு உங்களுக்கு தேவையான வரங்களை மகாலட்சுமியிடம் கேளுங்கள். இறுதியாக ஒரு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வரலட்சுமி பூஜை செய்த பலனும் உங்களுக்கு கிடைக்கும். ஆடி கடைசி வெள்ளி வழிபாட்டை நிறைவு செய்த பலனும் உங்களுக்கு கிடைத்துவிடும். சரி நீங்கள் உச்சரிக்க வேண்டிய அந்த மந்திரம் என்ன என்று தெரிந்து கொள்வோமா.

ஓம் தரித்ர விநாசினி அஷ்டலட்சுமி
கனகாவதி சித்திதேகி நமஹ !

இதையும் படிக்கலாமே: பதினாறு செல்வங்களைப் பெற்று பெருவாழ்வுடன் வாழ வரலட்சுமி வழிபாடு

இந்த இந்த இரண்டு வரி மந்திரம் தான் நாளை உங்களுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை பெற்று தரக்கூடிய மந்திரம் இந்த மந்திரத்தை நாளைய தினம் உச்சரித்து அனைவரும் பலன் பெறவும் அனைவருக்கும் மகாலட்சுமி அருள் ஆசி கிடைக்கட்டும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்