- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமஹாளய அமாவாசை அன்று வாராகி அம்மனை வழிபடும் முறை

மஹாளய அமாவாசை அன்று வாராகி அம்மனை வழிபடும் முறை

- Advertisement -

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம் என்றும் தினமும் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதை தவிர்த்து புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்குரிய தெய்வத்தையும் நாம் சிறப்பாக நாம் வழிபாடு செய்தோம் என்றார் பெருமாள் மற்றும் அந்த தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் அந்த வழிபாட்டால் அதிக அளவில் பலன் கிடைக்கும்.

அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மஹாளய அமாவாசை என்று கூறுகிறோம். பொதுவாக அமாவாசை தினத்தில் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அந்த வகையில் உத்திர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனை அமாவாசை தினத்தன்று வீட்டில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வாராகி அம்மனை வழிபடும் முறை

அமாவாசையில் சிறப்பு மிகுந்ததாக திகழக்கூடியது புரட்டாசி அமாவாசை. அமாவாசை தினங்களில் கால பைரவர், காளியம்மன் பிரத்யங்கிரா தேவி, வாராகி அம்மன், சரபேஸ்வரர் போன்ற உத்திர தெய்வங்களை வழிபாடு செய்வதும் மேலும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அதிலும் சிறப்பான புரட்டாசி அமாவாசை அன்று நாம் இந்த தெய்வங்களை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அதிக அளவில் நன்மைகள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தர்ப்பணம் கொடுப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தர்ப்பணத்தை கொடுத்துவிட்டு இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4 மணியிலிருந்து 6 மணி, காலை 6 மணியிலிருந்து 7 மணி, மதியம் 1 மணியிலிருந்து 2 மணி, மாலை 6 மணியிலிருந்து இரவு உறங்குவதற்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய வசதிக்கேற்ப இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு வாராகி அம்மனுக்கு என்று ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். இந்த நெய்வேத்தியத்தை காப்பரிசி என்று கூறுவோம். இதற்கு பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சுத்தமான துணியில் போட்டு உலர விட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு துண்டு வெல்லம், ஒரு ஏலக்காய், சிறிது சுக்கு தூள் இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து அதை அப்படியே உருண்டையாக பிடித்து வாராகி அம்மனுக்கு முன்பாக வைத்துவிட்ட வேண்டும்.

அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு துளசி இலை மாலை போட வேண்டும். அதேபோல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீங்களே உங்கள் கைப்பட விரலி மஞ்சளை மாலையாக கட்டி அம்மனுக்கு போட வேண்டும். அடுத்ததாக அம்மனுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் அட்சதையை பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு அதில் மூன்று அகல் விளக்குகளை வைக்க வேண்டும். ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்ற வேண்டும். மற்றொரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். மூன்றாவது அகல்விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் பஞ்சுத்திரி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு அகல் விளக்கு கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். மற்ற இரண்டு அகல் விளக்குகளும் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனின் மூலமந்திரத்தை உங்களால் முடிந்த அளவு எத்தனை முறை கூற முடியுமோ அத்தனையும் கூறி வாராகி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கொலு வைப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த முறையில் வாராகி அம்மனை மஹாளய அமாவாசை தினத்தன்று வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதோடு வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்