நாளை 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!

panguni-amavasai
- Advertisement -

அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாளாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாளை வரும் புரட்டாசி மகாளய அமாவாசை மிகவும் சிறப்பான பலன்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கிறது. மாதத்தில் இரண்டு முறை அமாவாசை வந்தால் அந்த மாதத்தில் சுப காரியங்கள் செய்வது குறித்து யோசிக்கப்படுகிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டிகள் அதிகம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் சுபகாரியங்கள் தடுக்கப்படுகிறது. ஆனால் பித்ருக்களை வழிபடுவதற்கு மகாலய பட்சம் இருப்பதால் நாளை முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட்டால் வாழ்வில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? யாருக்காக கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும் என்கிற விரிவான தகவல்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

amavasai

மகாளய அமாவாசை என்பது நம் தாய், தந்தையர் மற்றும் அவர்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் தர்ப்பணம் கொடுப்பது அல்ல. வழிவழியாக நம் வம்சத்தில் இறந்தவர்களை தான் முன்னோர்கள் என்று அழைக்கிறோம். அது எந்த உறவாக இருந்தாலும் சரி. நம் குடும்பத்திற்கு ரத்த பந்தம் உள்ள உறவுகள் தான் ஆத்மாக்களாக இருந்தாலும் நமக்கு நன்மைகளை செய்ய முடியும். அத்தகையவர்களை வழிபடும் ஒரு சிறந்த நாளாக நாளைய நாள் அமைந்துள்ளது.

- Advertisement -

உங்கள் வீட்டில் இறந்த எந்த உயிருக்கும் நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். நீங்கள் ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு பிராணிகளுக்கு கூட சேர்த்து தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை தரும். நாளைய நாளில் ஆண்கள் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழும். கணவனை இழந்த பெண்கள் கணவனுக்காக தர்ப்பணம் கொடுக்கலாம். இதைத் தவிர பெண்கள் எந்த காரணத்துக்காகவும், யாருக்காகவும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது ஆகம விதி.

Amavasai Tharpanam

உங்கள் தாய் தந்தையருக்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில் நீங்கள் அவர்களுக்கு வழிபாடுகள் செய்ய நினைத்தால் நாளைய நாளில் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து, காலை ஒரு வேளை உபவாசம் இருந்து காக்கைக்கு அன்னமிட்டு, யாருக்காவது ஒருவருக்காவது அன்னதானம் செய்து விட்டு நீங்கள் சாப்பிடலாம். இதை செய்தாலே உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

ஆண்கள் தங்களின் முன்னோர்களுக்காக காலை முதல் ஒரு வேளை மட்டும் உபவாசம் இருந்து அவர்களுக்கு பிடித்த அத்தனை உணவு வகைகளையும் தயார் செய்து படையல் போட்டு, வீட்டில் ஒரு தாம்பூலத்தட்டு வைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து யாருடைய காலிலும் படாதவாறு ஊற்றி விட வேண்டும். இதை முறையாக அந்தணரை அழைத்ததும் செய்யலாம். முடியாதவர்கள் இப்படி வீட்டிலேயே சாதாரணமாக எளிமையான முறையில் செய்து கொள்ளலாம்.

Amavasai Tharpanam

புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தில் மேலோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் அனைவரும் பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. இன்றைய நாளில் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொழுது அதை அவர்கள் மனமார ஏற்றுக் கொண்டு நம்மை வாழ்த்தி விட்டு செல்வார்கள். அமாவாசை தினங்களில், அல்லது திதி வரக்கூடிய நாட்களில் முறையாக முன்னோர்களை வணங்காமல் இருந்தாலும் இந்த நாளில் நீங்கள் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் உங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நியதி.

- Advertisement -

Amavasai Tharpanam

நாம் எவ்வளவோ விஷயங்களை தேவையில்லாமல் பொழுது போக்காக செய்து கொண்டிருக்கிறோம். நேரம் இல்லாத காரணத்தினால் முன்னோர்களை வழிபட நாளைய தினத்தை பயன்படுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம். மேலும் அமாவாசை தினத்தை பற்றிய முழு தகவல்களை தெரிந்து தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்க் ஐ செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
அமாவாசை விரத சிறப்புகள் என்ன? அமாவாசை பற்றிய அத்தனை சந்தேகங்களுக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -