மிகவும் அற்புதமான சக்திவாய்ந்த நாளாக இன்றைய தினம் திகழ்கிறது. இன்று மாலை 6:15 மணிக்கு மேல் தான் சதுர்த்தி திதி என்பது ஆரம்பம் ஆகிறது என்பதால் மாலை 6:15 மணிக்கு மேல் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இயன்றவர்கள் இன்றைய தினமே வழிபாடு செய்து விடுங்கள். இயலாதவர்கள் நாளை காலையில் கூட விநாயகரை வழிபாடு செய்யலாம்.
சங்கடஹர சதுர்த்தி என்றாலே மாலைப்பொழுதில் சந்திரன் உதயம் ஆகும் சமயத்தில் வழிபாடு செய்வது என்பது தான் சிறப்பு. அப்படி பார்க்கும் பொழுது இன்றைய தினம் வழிபாடு செய்வது என்பது தான் சிறப்பு. அப்படி முழுமையான பலனை பெறவும் வேண்டிய வரத்தை பெறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
விநாயகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றது. விநாயகப் பெருமானை நினைத்து நாம் எந்த ஒரு காரியத்தை செய்ய ஆரம்பித்தாலும் அந்த காரியத்தில் நமக்கு எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. செல்வ வளம் பெருகவும், குழந்தைகள் நன்றாக படிக்கவும், தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறவும் பல மந்திரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கேட்கும் வரத்தை தரக்கூடிய விநாயகர் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த மந்திரத்தை சதுர்த்தி திதி ஆரம்பித்த பிறகு குறைந்தபட்சம் மூன்று முறையோ அதிக பச்சம் 108 முறையோ கூறலாம். இந்த மந்திரத்தை வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு விநாயக பெருமானை பார்த்தவாறு கூறலாம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஆலயத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை கூறலாம். ஆலயத்திற்கும் செல்ல முடியாது. வீட்டிற்கு வரவும் காலதாமதம் ஆகும் என்று நினைப்பவர்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த மந்திரத்தை மனதார மூன்று முறை கூறினாலே விநாயகப் பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த மந்திரத்தை விரதம் இருந்து தான் கூற வேண்டும் என்று இல்லை. விரதம் இல்லாமல் இருப்பவர்கள் கூட இந்த மந்திரத்தை கூறலாம். அசைவம் சாப்பிடாமல் இருந்தால் போதும். இந்த மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருளால் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே
ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர
ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி
ப்ரதி கூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாகா
இதையும் படிக்கலாமே கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை குறைந்தபட்ச மூன்று முறையாவது விநாயகப் பெருமானை நினைத்து கூறுபவர்கள் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும். இயன்றவர்கள் தினமும் இந்த மந்திரத்தை வழிபாடு செய்யும்பொழுது உச்சரிக்கலாம்.